ஒரு தனியார் தொலைக்காட்சி வீடியோவை வைத்து வெளியான செய்தி மூலம்  நடிகர் ஷாருக்கான்  சமூக ஊடகங்களில் வைரலாக மாறி உள்ளார்.  

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவர் இந்திய சினிமாவின் அடையாளமாகவும் இருந்து வருகிறார். இவர் குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி வழங்கிய வீடியோ ஒன்று திடீரென்று சமூக வலைத்தளங்களில் பரவியது.  அந்த வீடியோ தொகுப்பு செய்தியில் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் ஷாருக்கான்,  பாகிஸ்தானுக்கு ரூ .45 கோடி நன்கொடை அளித்தாகக்  கூறுவதாக இருந்தது.  உடனே இந்த வீடியோ தொகுப்பு குறித்துப்  பல ஊடகங்கள் விசாரணையில் இறங்கின.

When Shah Rukh Khan said charity should be done in silence and ...

இப்படி சமூக ஊடகங்களில் வெளியாகின்ற பல செய்திகள் உண்மையைப் போன்றே உள்ள போலிகள். பலரும் இந்தக் கொரோவா வைரஸ் பரவல் நேரத்தை சாதகமாக வைத்துக் கொண்டு வகுப்புவாத மோதல்களை உருவாக்க முயன்று வருகின்றனர். அதற்குச் சமீபத்தில் பலியாகி இருப்பவர் ஷாருக்கான். இந்த வீடியோவை வைத்து இந்த நடிகர் குறித்து அவதூறு பரப்புவதற்காக அவருக்கு எதிராகச் செயல்படும் ‘சமூக ஊடக ஆர்மி’ உடனே அதனை எடுத்துப் போட்டு வதந்தி பரப்பியது. ஆனால் அதன் உண்மைத் தன்மை குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இந்த இடைவெளிக்குள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஷாருக் பாகிஸ்தானுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டி பல ட்வீட்டுகளை போட்டனர்.  மேலும் பலரும் அதனை வைரலாக பரப்பினர்.

image

இந்நிலையில் பாக்கிஸ்தானுக்கு நன்கொடை அளித்ததாக ஷாருக் மீது குற்றம் சாட்டும்  அந்தத் தொலைக்காட்சி வீடியோ 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பழைய தொகுப்பு என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் ஒரு எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 219 பேர் கொல்லப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ஷாருக் ரூ .45 கோடி நன்கொடை அளித்ததாக ஒரு தகவல் பரவியது. அப்போது அது குறித்து விசாரணை செய்தபோது அந்தச் செய்தியும் போலியானது என்றும் அவர் பாகிஸ்தானுக்குப் பணம் தரவில்லை என்றும் கண்டறியப்பட்டது. அது தொடர்பான வீடியோவைதான் இப்போது யாரோ சில விஷமிகள் வெட்டி, ஒட்டி ஜோடனை செய்து வதந்தியைப் பரப்பி உள்ளனர். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.