கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது. சமூகப் பரவலைத் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதன்காரணமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 411 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

கொரோனா வைரஸுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறையினர் அக்கறை செலுத்திவருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்போர்ட்டிங் மருந்துகள் சிகிச்சையாக அளிக்கப்பட்டுவருகின்றன. அதனால் உயிரிழப்பைத் தடுக்க டாக்டர்கள் போராடிவருகின்றனர். இந்தச் சூழலில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனையும் நடந்துவருகிறது. டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைகள் பேருதவியாக இருந்தன. கொரோனாவுக்கும் கபசுரக் குடிநீரைப் பருக மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். கபசுரக் குடிநீர் பருகுவது குறித்து தெளிவான விளக்கத்தை அவர் கூறியுள்ளார்.

கபசுரக் குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

மீனா குமாரி

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அலோபதி மருந்துகளுடன் கபசுரக் குடிநீரும் வழங்கினால் அந்த நோயாளிகள் விரைவில் குணமடைவார்கள். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கபசுரக் குடிநீரைப் பருகும் அளவு என்ன?

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்.

5 முதல் 10 கிராம் பொடியை 600 மி.லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அது, 60 மி.லி ஆகக் குறையும்போது அதை வடிகட்டிக் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாக கபசுரக் குடிநீரைத் தயார் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை குடிக்க வேண்டும். உணவுக்கு முன்போ அல்லது பின்போ குடிக்கலாம். நோயாளி குணமடையும் வரை தொடர்ந்து கபசுரக் குடிநீரை அருந்த வேண்டும்.

டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் கஷாயம் நல்ல பலனை அளித்தது. அதுபோல கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதா?

கபசுரக் குடிநீர்

நிச்சயமாக, கபசுரக் குடிநீர் போன்று ஆடாதோடை குடிநீர், விஷ சுரக் குடிநீர், தாளக (மால்தேவி) செந்தூரம், கோரோசனை மாத்திரை உள்ளிட்டவை உள்ளன.

தற்போதைய சூழலில் மக்கள் கபசுரக் குடிநீரைப் பருகலாமா?

Also Read: கபசுர குடிநீர்… கொரோனாவுக்குத் தீர்வாகுமா சித்த மருத்துவம்?

தாராளமாக கபசுரக் குடிநீரை அருந்தலாம். எனினும் இப்போதைய சூழலில் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

சித்த மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏதாவது முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

இது மாநில அரசின் கொள்கையைப் பொறுத்தது. சித்த மருத்துவமனைகளைக் கொரோனா தனி வார்டுகளாக மாற்ற விரும்பினால் அதற்கு சில அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்திலிருந்து பரிந்துரைக்க மருந்துகள் உள்ளதா அது தொடர்பான ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கிறதா?

கொரோனா வைரஸ்

வழிகாட்டு நெறிகளை வகுத்து வருகிறோம். சில மருந்துகளின் பெயர்களை ஆயுஷ் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளோம். அதில் கபசுரக் குடிநீர், விஷ சுரக் குடிநீர் ஆகியவற்றைச் சேர்த்துள்ளோம்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில்தான் டெங்குக் காய்ச்சலைக் கட்டுபடுத்த நிலவேம்புக் குடிநீர், அரசு மருத்துவமனைகளிலேயே வழங்கப்பட்டது. அதுபோல கொரோனாவுக்கு ஏதாவது மருந்துகளை சித்த மருத்துவம் தரப்பில் வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

கொரோனா

ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்த சிகிச்சையை வழங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.

சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

கொரோனா வைரஸ்

சித்த மருத்துவம் மூலம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்

கொரோனா வைரஸால் மனித உடலில் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. அதனால் நுரையீரலைப் பாதுகாக்கக் கூடிய மருந்துகளை சித்த மருத்துவம் தற்போது பரிந்துரைக்க வாய்ப்புள்ளதா?

கொரோனா

கபசுரக் குடிநீர், ஆடாதோடை குடிநீர் போன்றவை கபத்தைச் சீர்செய்யக் கூடியது என்பதால், கொரோனா நுரையீரல் அழற்சியைக் (Pneumonitis) குணமாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கொரோனாவைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் என்னென்ன முயற்சிகள் நடந்துவருகின்றன?

கொரோனா

மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி வருகிறோம். மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக வேம்பின் இலை, சுக்கு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை உண்பதின் மகத்துவத்தை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.