துருக்கியைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஹெலின் போலக் 288 நாள்கள் பட்டினிப் போராட்டத்திற்கு பிறகு வீர மரணம் அடைந்தார்.
துருக்கியைச் சேர்ந்தவர் 28 வயதான இசைக் கலைஞர் ஹெலின் போலக். துருக்கியில் பிரபலமான ‘க்ரூப் யோரம்’ இசைக்குழுவை அவர் நடத்தி வந்தார். துருக்கியின் நாட்டுப்புற இசையினை அடிப்படையாகக் கொண்டு இக்குழுவானது பாடல்களை உருவாக்கியது. அரசுக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை பாடி வந்த ‘க்ரூப் யோரம்’ இசைக்குழுவை துருக்கி அரசு 2016’ஆம் ஆண்டு தடை செய்தது. குழுவில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து தங்கள் இசைக்குழு மீதான தடையை நீக்கவும் கைது செய்யப்பட்ட சகாக்களை விடுவிக்கக்கோரியும் போராட்டத்தை துவங்கினார் ஹெலின் போலக். கடந்த 288 நாட்களாக பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்ட அவர் துருக்கியில் உள்ள இஸ்தான்பூலில் நேற்று உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் – ட்ரம்ப் உறுதி !
கடந்த மாதம் ஹெலினின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் குழுவானது துருக்கி அரசிடம் ஹெலிலின் போராட்டம் குறித்து பேசியது. ஆனால் ஹெலின் தனது பட்டினிப் போராட்டத்தை நிறுத்தாமல், கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது என துருக்கி அரசு அதனை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் கடந்த மார்ச் 11’ஆம் தேதி ஹெலின் வலுக்கட்டாயமாக சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
தனது அரசியல் மற்றும் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற போராளியான ஹெலின் எனும் இசை தேவதை நேற்றைய தினம் நம்மிடமிருந்து விடைபெற்றுப் பறந்தது. கலை சாவை மதிப்பதில்லை…!