களத்தில் பேரிடர் மேலாண்மை குழு… ஓய்வூதியம் பெற காத்திருந்த முதியவர்கள்… #Day9 #Curfew
By Thagadur
ஓய்வூதியம் வாங்குவதற்காக வங்கி வாசலில் காத்திருந்த முதியவர்கள்மதுரை மாநகர ஆணையர் விசாகன், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் குறித்த ஆய்வு செய்தார்.மதுரை மாநகராட்சி ஆணையர் காய்கறி சந்தையில் ஆய்வு செய்தார்.காவல்துறை வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது..பெசன்ட் நகரில் வரிசையாக நின்று காய்கறி வாங்கும் மக்கள். தெரு நாய்களுக்கு பசியாற்றும் மனிதர். காமராஜர் சாலையில் பேரிடர் பாதுகாப்பு ஊழியர்கள், வாகனத்தில் செல்லும் மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்தனர். முதியோர் பென்ஷன் பணம் வாங்க கூடுவாஞ்சேரி இந்தியன் வங்கியின் முன் காத்திருக்கும் முதியவர்கள்.திண்டுக்கல்லில் செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவால் மொட்டம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் முன் தாயம் விளையாடும் பெண்கள்.திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.சமூக விலகலைப் பற்றி கவலைப்படாமல் காய்கறி வாங்கும் மக்கள்.விழுப்புரத்தில் வேலை முடிந்தபின் நகராட்சி குப்பை வண்டியில் ஏறிச் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்.காவலர்களுக்கு தண்ணீர் வழங்கிய பொதுமக்கள்.மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்புடன் பொதுமக்கள்.நெல்லை மாவட்டம் அருகேயுள்ள கொங்கந்தான்பாறை கிராமத்தில் புதிதாக வருவோர்கள் கிருமி நாசினியால் கைகால்களை கழிவிய பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.நெல்லை சித்த மருத்துவமனையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை. ஊரப்பாக்கம் அருள் நகர் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் கூடுவாஞ்சேரி நகராட்சி ஊழியர்கள்.அரசு ஊழியர்களுக்காகத் தயாராகும் மதிய உணவு.நாகர்கோவிலில் நான்கு சக்கர வாகனம் கிடைக்காததால் கால்நடையை இரு சக்கர வாகனத்தில் சுமந்து செல்லும் நபர்கள்.காரைக்குடி நகராட்சி முன்பாக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளின் போது காதி மற்றும் கதர் தொழில்வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் கிருமி நாசினி தெளித்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசவத்திற்கு பிரசித்தி பெற்ற அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை நுழைவாயிலில் நிபந்தனைகளுடன் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.தமிழக பேரிடர் மேலாண்மை மதுரை வந்திறங்கியது