தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு.

கொரோனா தொற்று உறுதியான 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள். தமிழகத்தில் இன்னும் சமூகத் தொற்று ஏற்படவில்லை என
சுகாதாரத்துறை விளக்கம்.

தொடர்ந்து தேவையின்றி வெளியே வருபவர்களைத் தடுக்க 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

image

அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் வீட்டின் மின் விளக்குகளை அணைக்க வேண்டும். வீடுகளில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.

உலகெங்கும் கொரோனா பறித்த உயிர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. நியூயார்க் நகர மயானங்களில் குவியும் சடலங்கள். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? எண்ணிக்கை விவரங்கள்!!

image

புதிதாக கைதானால் சிறையில் தனி அறை – சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்

உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடங்கியுள்ளதாக சர்வதேச நிதியம் கவலை. 90 நாடுகள் அவசர நிதியுதவி கேட்டுள்ளதாகவும் தகவல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.