வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது.

image

நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென்றும், சமூக விலகல் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

image

இந்நிலையில் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது சமூக பரவலை தடுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் – ட்ரம்ப் உறுதி !

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.