கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மக்கள் தங்களது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் வேலையிழப்புப் பயன்களைப் பெறுவதற்காக மட்டுமே ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் பல இடங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே ஆகும். அரசாங்கத் தகவலின் படி மார்ச் மாதத் தொடக்கத்தில் 3.341 மில்லியன் வேலையிழப்பு பயனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Also Read: சீனா, இத்தாலி, ஸ்பெயின் முதல் அமெரிக்கா வரை… அந்த நாடுகளில் லாக் டவுன் நிலை என்ன?

ஆனால், மார்ச் 28-ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 3.307 மில்லியன் உயர்ந்து 6.648 மில்லியனைத் தொட்டுள்ளது. உலகத்தில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் தற்போது முதலிடத்தில் உள்ளது. அங்கு 2,77,445-க்கும் மேற்பட்டோர் (ஏப்ரல் 4-ம் தேதி நிலவரப்படி) இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வேலையிழப்பும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் 2007-2009ல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால் அமெரிக்காவில் 8.7 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்பட்டன. அப்போது 6,65,000 வேலையிழப்பு பயனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொழிலாளர்களின் நலனுக்காகக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று $2.3 மில்லியன் நிதியுதவி திட்டத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதன்மூலம் சுயதொழில் செய்வோர் மற்றும் தற்காலிக வேலையில் உள்ளோர் ஆகியோரும் பயனடைவர். இதோடு கூடுதலாக வேலையில்லாதோர் நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் $600 கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் பொருளாதார ஆய்வுப்படி அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் விவசாயம் அல்லாத தொழில்களின் சம்பளப் பட்டியல் 1,00,000 வேலை அளவிற்குக் குறைந்துள்ளது. ஆனால், இது பிப்ரவரியில் 2,73,000 அளவு உயர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், வேலையிழப்பு மார்ச் மாதத்திற்குப் பிறகு 3.8 சதவிகிதமாக இருக்கும் என அதன் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Also Read: 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த கத்தார் ஏர்வேஸ் -வேலையிழப்பு அபாயத்தில் விமானப் பணியாளர்கள்

அமெரிக்காவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் 16 மில்லியன் வேலையிழப்பு ஏற்படும். இதனால் வேலையிழப்பு 3.5 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை இந்நிலை ஏற்பட்டால் அமெரிக்காவில் 1929-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவிற்குப் பிறகு, ஏற்படும் அதிக வேலையிழப்பாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.