கடந்த மாதத்தின் கார் விற்பனையைப் போலவே, டூ-வீலர் விற்பனையும் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளது. ஆம், இதில் அதிகபட்சமாக பஜாஜ் 55% வீழ்ச்சியையும், குறைந்தபட்சமாக ராயல் என்ஃபீல்டு 41% சரிவையும் சந்தித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலிலும்கூட, நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் அதிக ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் ஹோண்டா, மார்ச் 2020 மாத விற்பனையில் 11% ஏற்றம் பெற்றிருக்கிறது. கொரோனாவைத் தாண்டி டீலர்களிடம் தேங்கும் கையிருப்பு, அதிகரித்த இன்ஷூரன்ஸ் பிரிமியம், BS-6 காரணமாக 10-15% விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்கள், இந்தியாவில் டூ-வீலர் விற்பனையைக் கடந்த சில மாதங்களாகவே சீரற்ற நிலையில்தான் வைத்திருக்கின்றன. ஏப்ரல் 1, 2020 முதலாக BS-6 விதிகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், கொரோனா மொத்த நாட்டையும் முடக்கி வைத்திருக்கிறது.

டூ-வீலர் விற்பனை

மார்ச் 2020: உள்நாட்டு விற்பனை

ஹீரோ: 3,34,747 டூ-வீலர்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிட்டால் 42% குறைவு)

ஹோண்டா: 2,61,699 டூ-வீலர்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிட்டால் 11% அதிகம்)

டிவிஎஸ்: 1,33,988 டூ-வீலர்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது, 1,76,897 டூ-வீலர்கள் குறைவு)

பஜாஜ்: 98,412 டூ-வீலர்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிட்டால் 55% குறைவு)

சுஸூகி: 33,930 டூ-வீலர்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிட்டால் 42% குறைவு)

ராயல் என்ஃபீல்டு: 32,630 டூ-வீலர்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிட்டால் 41% குறைவு)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.