கடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் கொரோனா அறிகுறிகள் குறித்த மெசேஜ் ஒன்று வேகமாகப் பரவிவருகிறது. அதில்…

கொரோனா

`வறட்டு இருமல் + தும்மல் = காற்று மாசுபாடு

இருமல் + சளி + தும்மல் + மூக்கு ஒழுகுதல் = பொதுவான சளி

இருமல் + சளி + தும்மல் + மூக்கு ஒழுகுதல் + உடல் வலி + பலவீனம் + லேசான காய்ச்சல் = காய்ச்சல்

உலர் இருமல் + தும்மல் + உடல் வலி + பலவீனம் + அதிக காய்ச்சல் + சுவாசிப்பதில் சிரமம் = கொரோனா வைரஸ்

எனக்கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி சித்த மருத்துவர் விக்ரம்குமார் பேசியபோது…

சித்த மருத்துவர் விக்ரம் குமார்

“இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகள் யாவும் அந்தந்த நோய்களுக்குச் சரியானவைதான். ஆனால், கொரோனா என்ற மருத்துவ அவசரம் நம்மைச் சுற்றி நிலவிவருவதால், இந்த மாதிரியான மெசேஜ்களை இப்போதைக்கு கருத்தில் கொள்ள வேண்டாம்.

அதேபோல எந்தவொரு நோய்க்கும் மருத்துவ ஆலோசனையும் வழிகாட்டுதலும் மட்டுமே சரியான தீர்வு. ஆகவே, சுய மருத்துவமும் சுய பரிசோதனைகள் – முடிவுகளும் கூடாது. எந்தவோர் அறிகுறி ஓரிரு நாள்களுக்குள் கட்டுப்படாமல் இருக்கிறதோ, எந்தவோர் அறிகுறி நாளுக்கு நாள் தீவிரமாகிறதோ அதை உதாசீனப்படுத்தவே கூடாது. அருகிலிருக்கும் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும்.

Also Read: `கொரோனா அமெரிக்காவின் ஆயுதமா?..1981 நாவல்!’ – #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #FactCheck

குறிப்பாக சர்வதேசப் பயணிகள், அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள், நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள், ஐஸோலேஷன் வார்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களோடு நேரடித் தொடர்பிலிருந்த நபர்கள், ரெட் அலர்ட் ஏரியாவில் வசிக்கும் மக்கள் ஆகியோர் தங்களின் எந்தவோர் அறிகுறியையும் உதாசீனப்படுத்திவிட வேண்டாம்.

கொரோனா வைரஸ்

அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்த்து, ஒருசிலர் தங்களின் அனைத்து உடல் உபாதைகளையும் கொரோனா என நினைத்து பயப்படக்கூடும் அபாயமும் இப்போதைக்கு இருக்கிறது. அனைவரும் பதற்றத்தைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையோடு இருங்கள்” என்றார் அவர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.