இந்தியாவில் 2902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும்கூட விழிப்புணர்வின்றி மக்கள் இயல்பாக வெளியிடங்களில் நடமாடுகிறார்கள். இப்படி விழிப்புணர்வின்றி செயல்பட்டதன் விளைவாக மத்தியப்பிரதேசத்தில் 1,500 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Also Read: `கணவருக்குக் கொரோனா கஷாயம்; புதைக்கப்பட்ட 93 சவரன் நகைகள்!’ -போலீஸை மிரளவைத்த ட்விஸ்ட்

தடுப்பூசி

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ், துபாயில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பியதால் சுரேஷும் துபாயிலிருந்து கடந்த மாதம் 17-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் மோரினாவுக்கு வந்துள்ளார்.

சுரேஷின் தாயாருக்கு மார்ச் 20-ம் தேதி நினைவுநாள் என்பதால் அன்று 1,500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்திருக்கிறார். கொரோனா பரவும் சூழலில் எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் 1,500 பேரும் ஒன்றாகக் கூடி சாப்பிட்டுள்ளார்கள்.

டெஸ்ட்

இந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி சுரேஷுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கடந்த 20 தினங்களில் யாரையெல்லாம் தொடர்புகொண்டார் என்பதை விசாரித்தபோதுதான், ஓரே நாளில் 1,500 பேர் கூடி விருந்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சுரேஷின் நெருங்கிய உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. 23 பேருக்கு நடந்த சோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மற்ற 13 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். சுரேஷ் கொடுத்த விருந்தில் கலந்துகொண்ட எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ஏற்கெனவே 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், இந்த 1,500 பேரும் பரிசோதிக்கப்பட்டால் என்னும் எண்ணிக்கை அதிகமாகும் என அம்மாநில முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா

இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் உயர் மருத்துவ அலுவலர் ஒருவர் வழங்கியுள்ள பேட்டியில், `சுரேஷ் துபாயிலிருந்து கிளம்பும்போது அவருக்குக் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும், இதுபோன்ற இக்கட்டான சூழலில் 1,500 பேருக்கு விருந்து கொடுத்தது மிகவும் தவறானது. மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டுதான் வருகிறோம். மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவரை கொரோனாவை நாட்டிலிருந்து விரட்ட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.