தொற்று நோயான கொரோனா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுகிறது. கொரோனா பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவது, அவர் தொட்ட பொருட்களை தொடுவது என எளிதாக தொற்றும் வைரசாக கொரோனா உள்ளது. அதனைத் தடுக்கவே சமூக விலகல் வேண்டுமென அரசுகள் கேட்டுக்கொள்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர் வேறு நபருடன் நெருக்கமாக அருகில் நின்று பேசுவதன் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ், தும்மல், இருமல் மூலம் காற்றில் பரவி வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது. அமெரிக்காவின் தேசிய அகாடமி ஆப் சயின்ஸ் நடத்திய ஆய்வில், நெருக்கமாக அருகில் நின்று மூச்சு விடுதல் மூலமும், பேசுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அகாடமியின் தலைவர் டாக்டர் ஹார்வி பைன்பெர்க், அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் முக கவசங்களை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்துவது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருகிறது.
கொரோனா இருப்பவர்கள் அருகில் இருந்தால் ‘அலார்ட்’ செய்யும் புதிய செயலி அறிமுகம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM