கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா `லாக் டவுணி’ல் இருக்கும் இந்த நேரத்தில் கிடைத்திருக்கும் ஒரு தரவு, அதிர்ச்சியளிக்கிறது. ஊரடங்கு அமலில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

`ஊரடங்கு உத்தரவு

இது குறித்து தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, “நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் இந்த ஊரடங்குத் தடைக்காலத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவாக நாங்கள் பெண்களிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலமாகத்தான் புகார்களைப் பெறுகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் நாடு முழுவதிலுமிருந்து 116 புகார்களைப் பெற்றிருக்கிறோம்.

ஊரடங்கின் முதல் 10 நாள்களில் மொத்தம் 257 புகார்கள் வந்துள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் ஆணையத்துக்கு 69 குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள் வந்துள்ளன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 புகார்கள் வருகின்றன. பெரும்பாலான புகார்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடித்துத் துன்புறுத்துவதாகவே இருக்கின்றன.

கொரோனா வைரஸ்

பொதுவாகப் பெண்கள், கணவர் வீட்டில் கணவரால் தனக்குப் பிரச்னை என்றால் தங்கள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், தற்போதுள்ள சூழலில் அவர்களால் அதுவும் முடியாது. பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற புகார்களைக் காவல் நிலையத்தில் கொடுக்க பயப்படுகின்றனர். அதனால் எங்களிடம் புகார் அளிக்கின்றனர். அப்படி புகார் அளிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறோம். எங்களிடம் பெண்கள் நேரடியாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்த இக்கட்டான நேரத்திலும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படுவது வேதனை அளிக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, `இந்தியாவில் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 90 புகார்கள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்தபடியாக டெல்லியில் 30 புகார்களும் மஹாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் 18 புகார்களும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 11 புகார்களும் பதிவாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம்

பதிவாகியுள்ள மொத்த புகார்களில் பெண்கள் உரிமை சம்பந்தப்பட்ட புகார்கள் 77, குடும்பப் பிரச்னைகள் குறித்த புகார்கள் 69, பெண்களை வீட்டில் துன்புறுத்துதல் குறித்த புகார்கள் 15 மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து 13 புகார்களும் பதிவாகியுள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.