நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், பிரபல கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து, கிராம சேவையின் மூலம் முதுகலைப் பட்டதாரியான சுப்புராமன், ஊராட்சி மன்றத் தலைவரானார். இவரது சிறப்பான செயல்பாடுகளால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திலும் இந்த ஊராட்சி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

சுப்புராமன்

இதுபற்றி சுப்புராமனிடம் பேசினோம். “நான் இந்த ஊராட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றபோது, பஞ்சாயத்து இருப்பு நிதி ரூ.20 லட்சமாக இருந்தது. பதவியேற்ற மூன்றே மாதத்திற்குள் குடிநீர் கட்டணம், பஞ்சாயத்துக் குளங்கள் ஏலம் விட்டதில் வந்த தொகையென ரூ. 5 லட்சம் வசூலித்து, தற்போது இருப்புத் தொகை ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளது. கடைவீதியில் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், நடந்தால் உடனடியாகக் கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தவுள்ளோம்.

மேலும், எங்கள் ஊரில் பிறந்து வெளிநாட்டில்,வெளியூர்களில் வசிப்பவர்கள் பிறந்த மண்ணுக்கு ஏதேனும் நல்லது செய்யவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்திற்கேற்ப, எங்கள் ஊரின் பெயரின் முதல் இரண்டு எழுத்தான ‘கரு’ என்ற பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளேன். இந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அரசை எதிர்பாராமலே நிறைவேற்றுவேன்.

கொரோனா

கொரோனா தொற்று பாதிக்காமலிருக்க, மோட்டார் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளித்துவருகிறோம். வாகனம் போக முடியாத இடங்களுக்கு, கைத்தெளிப்பான் மூலம் ஆட்களை வைத்து தெளிக்கிறோம். மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமலிருக்க, அவர்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்களை போனில் சொன்னால், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் மூலம் அவரவர் வீட்டுக்கு கொண்டுபோய்த் தருகிறோம். ரேஷன் பொருள்களைப் பெற, வீட்டுக்கு ஒருவர் வந்து கையொப்பம் போட்டு பொருள்களைப் பெற்றால், அதை அவரவர் வீட்டுக்குச் சென்று ஒப்படைக்க வாகன வசதி ஏற்பாடு செய்துள்ளோம். எல்லா வகையிலும் என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்து தர தயாராக இருக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.