வீரபாண்டி ராஜா சேலம் தி.மு.க கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க தோல்வியடைந்தது. அதையடுத்து வீரபாண்டி ராஜா வகித்து வந்த கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு டம்மியான மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

முகக் கவசம்

அதையடுத்து விரத்தியில் இருந்த ராஜா, பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஏழை எளிய மக்கள் வருமானமில்லாமல் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வீரபாண்டி ராஜா வீதியில் இறங்கி தன் கைகளால் மக்களுக்கு முகக் கவசம் அணிவித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் வழங்கினார். இதனால் பொதுமக்கள் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.

உதவி

இதுபற்றி வீரபாண்டி ராஜா தரப்பில் விசாரித்த போது, ”கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளன. இதனால் அடித்தட்டு மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி அண்ணன் வீரபாண்டி ராஜா களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சின்ன கவுண்டாபுரம், பெரிய கவுண்டாபுரம் ஊராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் முகக் கவசம், ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, பருப்பு மளிகைப் பொருள்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார். இதில் 3,000 குடும்பங்களுக்கு சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் உதவி செய்தார். பொதுமக்கள் மகிழ்ச்சியாகப் பொருள்களை வாங்கிச் சென்றார்கள்” என்றார்

ராஜா

இதுபற்றி மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் வீரபாண்டி ராஜாவிடம் கேட்டதற்கு, ”ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து தி.மு.க தலைவரின் உத்தரவுபடி பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்காதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முகக் கவசம் கொடுத்து அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் உதவிகள் செய்திருக்கிறோம். தலைவர் ஸ்டாலின் வழியில் பொதுமக்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்வோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.