உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றினால் 1,00,000 முதல் 2,00,000 வரை இறப்புகள் இருக்கலாம் எனக் கணித்துள்ள அமெரிக்கா, அதை எதிர்கொள்ள ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்கள் தேவைப்படும் எனக் கருதுகிறது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற காரணத்தினாலும் அதன் தயாரிப்புச் செலவும் அதிகம் என்பதாலும் புதிய, விலை குறையான வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது அமெரிக்கா.

கொரோனா

இந்தப் பெரும் சவாலினை எதிர்கொள்ள குறைந்த செலவில் அதிக வென்டிலேட்டர்களைத் தயாரித்திட இந்தியப் பொறியாளர்களை ஊக்குவித்து வருகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இந்த வென்டிலேட்டர்களைப் பெருமளவில் தயாரித்து உயிர்ச்சேதங்கள் மேலும் அதிகரிக்காமல் குறைக்கலாம். இதுவரை இந்தக் கொரோனாவின் கோரப்பிடியினால் அமெரிக்காவில் மட்டும் 5,000 -க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் மொத்தத்தில் 50,000 -க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் இந்தப் புதிய முயற்சியைக் கையில் எடுத்திருப்பதாகக் கூறுகிறது அமெரிக்கா.

இந்த உயிரிழப்புகள் என்பது அடுத்து வரும் நாள்களில் லட்சங்களைத் தொடும் பெரும் அபாயம் இருப்பதாகக் கூறும் அமெரிக்கா, விரைவில் பல வென்டிலேட்டர்களைத் தயாரிக்க சுமார் 11 தனியார் நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இதில் கார் மற்றும் விமானம் தயாரிக்கும் நிறுவனங்களும் அடங்கும்.

Also Read: `மிகக் கடுமையான 2 வாரங்கள்; 2.2 லட்சம்!’ – ட்ரம்ப் எச்சரிக்கை; வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி கணிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

“கொரோனாவை எதிர்கொள்ள குறைந்த செலவில் வென்டிலேட்டர்களைத் தயாரித்திட இந்தியப் பொறியாளர்களை ஊக்குவித்து வருகிறோம்” என ட்வீட் செய்துள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய மாகாணத்தின் துணைச் செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ். அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்பப் பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் ஆலோசனைபடி இந்தக் கண்டுபிடிப்பு வெற்றி பெற்றால் இதை மேலும் விரிவுப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

Also Read: வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் கொரோனா 
தீவிரமும்! உலக நாடுகளுக்கு இன்னொரு சிக்கல்!

இந்தியப் பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு வெற்றி பெற்றால் மனித குலத்திற்கே இது பெரும் உதவியாக அமையும். தற்போது பயன்பாட்டில் உள்ள வென்டிலேட்டரின் மதிப்பு 30,000 அமெரிக்க டாலர் ஆகும். மாணவர்கள் & மருத்துவத் தொழில்நுட்பக் கலைஞர்கள் உருவாக்கிய அடிப்படை வென்டிலேட்டரின் மதிப்பு 400 முதல் 500 அமெரிக்க டாலர் தான். கைகளால் இயக்கப்படும் இந்த வென்டிலேட்டர்கள் அவசர காலங்களிலும் மாரடைப்பின் பொழுதும் பயன்படுத்தப்படலாம் என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.