ஊரடங்கால் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்தார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், முக்கிய தலைநகரங்களில் பணியாற்றிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், கூட்டம் கூட்டமாகத் தொழிலாளர்கள் பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்றதை நம்மால் காண முடிந்தது.

       image

குறிப்பாகத் தலைநகர் டெல்லியிலிருந்து அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நீண்ட பேரணியைப் போல் 500, 600 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றது நம் அனைவரது மனதையும் உலுக்கியது.

இந்த நிலையில்தான், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழர்கள் சிலர் நடந்தே வர முயன்றுள்ளனர். ஆனால், அப்படி நடந்த வந்த மாணவர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 22 வயதான பாலசுப்பிரமணி லோகேஷ் மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் பயிற்சி பெற்று வந்தார்.

        image

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து ரத்தானதால் 30 பேரும் தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளனர். நாமக்கல் நோக்கி வரும் வழியில் லாரிகளிலும் லோகேஷ் உட்பட 30 பேரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. தெலங்கானாவின் பவன்பாலிக்கு வந்தபோது 30 பேரும் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். முகாமிலிருந்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் உடல்நலக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.


கொரோனா வைரஸ் நோயாளி வருகையால் அலார்ட் : தனிமைப்படுத்தப்பட்ட வங்கி, ஏடிஎம்..! 


 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.