பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பொதுத்துறை வங்கிகளைப் பற்றிக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து அதன் ப்ளாஷ்பேக்கைப் பார்ப்போம்

#வங்கி

வங்கி என்பதற்கு கூட்டுப்பங்கு நிதி என்று பொருள். இது ஜெர்மானிய மொழியான `பாங்க்’, பிரெஞ்சில் `பாங்கே’ ஆகியவற்றியிலிருந்து தோன்றியது. பொதுமக்களிடமிருந்து பணம்பெற்று மக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது போன்ற பணிகளைச் செய்கிறது.

#இந்தியாவில்

இந்தியாவில் வங்கியானது முதன் முதலாக 1806-ல் `வங்காள வங்கி’ என்ற பெயரில் வங்காள மாநிலத்தில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1840-ல் பம்பாய் வங்கியும்,1843-ல் மெட்ராஸ் வங்கியும் தொடங்கப்பட்டன. இம்மூன்றும் பிரசிடென்சி வங்கி என அழைக்கப்பட்டது.1862-ல் காகிதப்பணம் அப்போது வெளியிட்டது. இந்தியர்களால் 1865-ல் அலஹாபாத் வங்கி தொடங்கப்பட்டது. பின்பு பஞ்சாப் நேஷனல் வங்கி, இம்பீரியல் வங்கி ஆகியவை தொடங்கப்பட்டன.

இவ்வாறு இந்தியாவில் வங்கிகள் வேகம் பெற்றன.

Representational Image

#ரிசர்வ் வங்கி

1929-ம் ஆண்டு பிரஸெல்ஸில் நடைபெற்ற சர்வதேச பணம் பற்றிய மாநாட்டில் (International monetary conference) ஒவ்வொரு நாட்டிலும் மைய வங்கி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. அதன்படி இந்திய ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934-ன்படி இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. 1937-ம் ஆண்டு அதன் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. 1944-ல் தேசியமயமாக்கப்படும் வரை தனியார் வங்கியாகவே செயல்பட்டு வந்தது.

1955-ல் State bank of Bikanur and jaipur, State bank of hyderabad, State bank of indore, State bank of mysore, State bank of saurashtra, State bank of patiala, State bank of travancore ஆகிய 7 வங்கிகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்தன.

#பொதுத்துறையான வரலாறு

1947 முதல் 1969 வரை 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலானது. மேலும், அது தனியார் நிறுவன முதலாளிகள் வசமிருந்தது.

ஜூலை 19,1969-ல் 14 பெரிய தனியார் வங்கிகளை நெருக்கடி காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை மையப்படுத்தும் வகையில் பதினான்கு வங்கிகளையும் தேசியமயமாக்கினார். இது வங்கிகளின் வரலாற்றில் திருப்புமுனை எனச் சொல்லலாம்.

அந்த 14 வங்கிகளாவன: Central Bank of India, Bank of India, Punjab national Bank, Canara bank, United commercial Bank, Syndicate Bank, Bank of Baroda, United bank of India, Union bank of India, Dena bank, Allahabad Bank, Indian bank, Indian overseas Bank, Bank of Maharashtra.

இதைத் தொடர்ந்து 1980-ல் 200 கோடிக்கு மேல் முதலீடு உடைய 6 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன அவை:

Andhra bank, Punjab and Sindh bank, New bank of India, Vijaya Bank, Corporation Bank, Oriental Bank of Commerce

Representational Image

#சாதனைகள்

வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின் வணிக வங்கிகளின் கிளைகள் பெருகி, வைப்புத் தொகைகளில் வளர்ச்சி ஏற்பட்டது. சிறு, குறு தொழில் வளர்ச்சியினால் வேலைவாய்ப்பு பெருகியது. வளர்ச்சியடைந்த மாநிலங்களில் வங்கிகளை விரிவுபடுத்தியது. வங்கி சேவை எளிமையானது. கிராமப்புறங்கள் வரை வங்கி சென்றது. சில வங்கிகள் அயல் நாடுகளில் கிளை தொடங்கி புதிய வழிகள் திறந்தன.

கடன் திட்டங்கள் உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தாலும் 1969-ல் ஆரம்பித்தது 1991 வரை எவ்வித இடையூறுமின்றி சென்றது.

#தனியார்மய தொடக்கம்

1991-ல் தாராளமய கொள்கை அறிமுகமான பின் இனி தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்படாது’ என அரசு அறிவித்தது. புதிய தனியார் வங்கி தொடங்கி அதில் 49% பங்குகள் தனியார் வசம் போனது. இயக்குநர் குழுவில் தனியார் அதிகாரிகள் இடம்பிடித்தனர். ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவிலும் தனியார் வங்கிப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.

தனியார் வங்கிகள் நுழைந்தவுடன் 40% கடன் சாதாரண மக்களுக்குக் கொடுக்கப்பட்டாலும் மீதித் தொகை பெரு முதலாளிகளுக்குத் தர ஆரம்பித்தது. பெரு நிறுவனத்துக்கு சில வங்கிகள் கூட்டாகச் சேர்ந்து கடன் வழங்கின. தனியார் மற்றும் அரசு வங்கிகள் அனைத்தும் வழங்கின. இதை வசூலிக்க `சர்பேசி’ `ஹேர்கட்’ திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இருந்தாலும் வாராக்கடனால் வங்கிக்கு சுமை அதிகமானது.

Representational Image

#வங்கிகள் இணைப்பு

வங்கிகள் எண்ணிக்கை குறைப்பு மற்றும் வங்கி இணைப்பு என்பது ஏற்கெனவே நரசிம்மன் கமிட்டி பரிந்துரைத்ததே. சர்வதேச அளவில் இயங்கத் தேவையான மூலதனத்துக்காக லாபம் குறைவாக இழப்பில் இயங்கும் வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பது என 1991-ல் பரிந்துரைத்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து கிளை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டன.

2019 ஏப்ரல் மாதம் விஜயா வங்கியும், தேனா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.

தற்போது இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்காக நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், காா்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.

வங்கியாக இணைக்கப்பட்டபோதிலும், பழைய வங்கிகளின் ஐஎஃப்எஸ்சி, பற்று, கடன் அட்டைகள், இணையவழி வங்கி சேவை, செல்லிடப்பேசி செயலி உள்ளிட்டவை பழைய முறையிலேயே இருக்கும். இதனால் வாடிக்கையாளா்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எளியோர் கடன் பெற இறுதிப் புகழிடமாய் இன்றும் விளங்குவது வங்கிகளே. தற்போது பொதுத்துறை வங்கிகள் நான்காக உள்ளன. எதிர்காலத்தில் இதன் நிர்வாகத்தில் மாற்றம் செய்யாமல், அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். வாராக்கடன் மற்றும் வங்கி மோசடிக்கும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி நிலைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். நேர்மையற்ற முறையில் அதிகக் கடன் வழங்கும் உயர்நிலை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கையின் மூலம் மட்டுமே அனைவரின் நம்பிக்கையையும் வங்கிகள் பெற முடியும்.

மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.