பியர் கிரில்ஸ் உடன்  ரஜினிகாந்த் பங்கேற்ற  தொலைக்காட்சி நிகழ்ச்சி புதிய சாதனையைப் படைத்துள்ளது
 
பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் பிரபலமான சாகச நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  ரஜினிகாந்த்  கலந்து கொண்டார்.  திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் ரஜினி, முதன்முறையாகப் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுதான். ஆகவே பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினிகாந்த் பியர் கிரில்ஸுடன் மிகத் தைரியமாகக் காட்டுக்குள் நுழைந்து மலையேற்றம் உள்ளிட்ட பல சாகசங்களைச் செய்தார்.  
 
Ahead of Rajinikanth's 'Into the Wild' episode with Bear Grylls ...
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் 23 அன்று 12  மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் இது சின்னத் திரையில் ரஜினியைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். மேலும் அக்ஷய் குமார் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.  இத்தனை ஆண்டுகளாக திரை உலகில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக சாதனை படைத்து வந்த ரஜினிகாந்த், இந்த முறை தொலைக்காட்சி உலகின் சாதனையையும் முறியடித்துள்ளார். 
 
பியர் கிரில்ஸுடன் ரஜினிகாந்த் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கான எபிசோட்  4 மில்லியன்  பார்வையாளர்களை சமீபத்தில் எட்டியுள்ளது. மேலும்  ஒட்டுமொத்த  முழுவதும் 12.4 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடையும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது நிகழ்ச்சியாகவும், இந்த ஆண்டை பொறுத்தவரையில் அதிக ரேட்டிங் பெற்ற நிகழ்ச்சியாகவும் மாறியுள்ளது.
 
Rajinikanth in Man Vs Wild: Bear Grylls shares first look of ...
 
அதேசமயம், மாநில மொழிகளில்  ஒளிபரப்பான பொழுதுபோக்கு  நிகழ்ச்சியின் பிரீமியர் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இது  ஒரு சில தமிழ் முன்னணி சேனல்களின் அளவைவிட அதிகம். மேலும், ரஜினிகாந்தின் இந்த எபிசோட்டிற்கு  கடந்த வாரங்களை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு சமூக ஊடகங்களிலும் பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது.
 
இதனிடையே இயக்குநர் சிவா எடுத்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ்  அச்சத்தால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.