உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி. இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் வைரஸ் பரவலின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 2,512 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

இந்த இக்கட்டானாகச் சூழலில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. இந்நிலையில் கொரோனா தொடர்பாக நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு எனக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மக்களிடம் உரையாடி வரும் பிரதமர் இன்றும் மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள மோடி, “அனைத்து மக்களுக்கும் வணக்கம். தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 10-வது நாள் இன்று. மக்கள் ஒன்று கூடி கொரோனாவை எதிர்த்துப் போராடத் தீர்மானித்துள்ளனர். இது மிகவும் ஊக்கமளிக்கிறது. ஊரடங்கை மதித்த அனைவருக்கும் என் நன்றிகள். நாடு தற்காலிக தடுப்பு நிலையில் உள்ளது. மக்கள் வீடுகளில் இருக்கும் போது எவ்வாறு கொரோனாவுக்கு எதிரான போரில் போராட முடியும் என நம்மில் பலரும் நினைக்கலாம்.

மோடி

ஆனால் தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள் நாம் 130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் ஒற்றுமையாக இணைந்து தான் உள்ளோம். இங்கு யாரும் தனியாக இல்லை. நாட்டின் பலம் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அனைத்து குடிமக்களும் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக நிற்கிறார்கள். இந்தியாவின் ஊரடங்கு உலகுக்கே முன்னுதாரணகியுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி நமக்கு மிக முக்கியம். அன்று இரவு 9 மணிக்கு சரியாக 9 நிமிடம் வீட்டில் மின் விளக்குகளை அணைத்தைவிட்டு அகல் விளக்கை, டார்ச் லைட்டை ஏற்றுங்கள். அப்போது நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.