கொரோனாவால் கேரள மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தற்போது, கேரள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ. 20,000 முதல் 25,000 வரை செலவாவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ வார்டுகளில் வைத்து நோயாளிக்கு சிகிச்சையளிக்க நேர்ந்தால், அப்போது வென்டிலேட்டர் செலவு கூடுதலாக ஆகும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50,000 வரை அரசுக்கு செலவாகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

14 நாள்கள் கழித்து நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இந்த நாள்களில் அரசே அத்தனை செலவுகளையும் மேற்கொள்கிறது. கொரோனா டெஸ்ட் செய்யவே ரூ.4,500 ஆகிறது. டெஸ்ட் கிட்டின் விலை ரூ.3,000 ஆகும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நோயாளி அரசு செலவில் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.1000 மதிப்பில் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தினமும் வழங்கப்படுகிறது.

கொரோனா நோயாளி வென்டிலேட்டர் வசதியுடன் ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டால், நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 25,000 வரை கூடுதலாக செலவாகிறது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு Personal Protective Equipment உடை ஒன்றுக்கு ரூ.500 முதல் 600 வரை செலவாகிறது. ஒவ்வொரு 4 மணி நேரத்துக்குப் பிறகும் இந்த உடைகள் கொடுக்கப்பட்ட வழிமுறைகளுடன் அழிக்கப்படுகிறது.

வென்டிலேட்டர் வசதி

Also Read: `மகாராஷ்டிரா டு நாமக்கல்.. 30 மாணவர்கள்..1,300 கி.மீ!’ -பாதிவழியில் தமிழக மாணவருக்கு நேர்ந்த சோகம்

அப்படி பார்த்தால், நாள் ஒன்றுக்கு ஐ.சி.யூ வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் 200 பாதுகாப்பு உடைகள் தேவைப்படுகிறது. இது தவிர நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள், நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் பானங்கள் அடிக்கடி கொடுக்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.