`நான் எனக்காகவும் என்னுடைய குழந்தைக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறேன்.. தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியேறும் அந்த முட்டாள்தனத்தை மட்டும் யாரும் செய்யாதீர்கள். அற்பகாரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறி நோயை வீட்டுக்குள் கொண்டுவந்து நீங்கள் துன்புறுவது மட்டுமல்லாமல் உங்கள் அன்பானவர்களையும் கொல்லாதீர்கள்’ என கடந்த வாரம் கரேன் மேன்னரிங் என்ற இங்கிலாந்து பெண் சமூகவலைதளத்தில் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். தற்போது அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

39 வயதான கேன் மேன்னரிங்-க்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 6 மாத கருவை சுமந்திருந்தநிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இரண்டு வார மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு கேன் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவரை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். இவர் அழகுநிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்குதான் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என அவர் கருதுகிறார்.
Also Read: `ப்ளீஸ் நீங்க கொஞ்சம் வீட்ல இருங்க..’- சிறுமியின் உருக்கமான பதிவு #Viral #Corona
“இரண்டு வார மருத்துவமனை வாழ்க்கைக்குப் பிறகு நான் வீடு திரும்பும்போது என் மீது பட்ட இயற்கைக் காற்று எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது” என கரேன் கூறியுள்ளார். கொரோனாவால் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் மருத்துவமனையில் இருந்த நாள்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

“நான் மூச்சுவிடும் அந்த சத்தம் எனக்கே ஓர் அச்சத்தைக் கொடுத்தது. இதையடுத்து, 999 என்ற அவசர உதவி எண்ணை அழைத்தேன். சிறிதுநேரத்தில் எங்கள் வீட்டின் முன்பு ஓர் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே, அவர்கள் எனக்கு ஆக்ஸிஜன் செலுத்தினர். என்னைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் தனிமையில் இருந்தேன். அது கடினமாக நாள்கள். இரண்டு அல்லது மூன்று நாள்கள் என்னுடைய பொழுது படுக்கையிலேயே கழிந்தது. என்னால் டாய்லெட்டுக்குக் கூட செல்ல முடியவில்லை.
Also Read: `உடைந்த கால்களுடன் 240 கி.மீ நடைப்பயணம்!’ – ஊரடங்கு உத்தரவால் கலங்கும் ராஜஸ்தான் இளைஞர்
நான் மூச்சுவிட சிரமப்படும்போது எல்லாம் உதவிக்காக செவிலியர்களை அழைப்பேன். அவர்கள் பாதுகாப்புக் கவசங்களை அணிந்து வரும்வரை நான் காத்திருக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தேன். நான் எனக்காவும் என் கருவில் இருக்கும் குழந்தைக்காகவும் போராடிக்கொண்டிருந்தேன். என் கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். என்னால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. என்னை சமாதானப்படுத்துவதற்காக என் குடும்பத்தினர் என்னுடன் போனில் உரையாற்றுவார்கள்.

நான் மருத்துவமனையில் இருந்து என் கணவருடன் வீடு திரும்பும்போது நானும் என் கணவரும் மாஸ்க் அணிந்துகொண்டு வந்தோம். காரின் ஜன்னல்களைத் திறந்தபோது என் மீதுபட்ட குளிர்ந்த காற்றை மறக்க முடியாது. இப்போது என் உடல்நலம் மெல்ல தேறி வருகிறது. எல்லோரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். கைகளை நன்றாகக் கழுவுங்கள். தயவுசெய்து தேவையின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். என் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி! எனத் தெரிவித்துள்ளார்.