பொதுமக்களின் அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அவசர பயணத்திற்கு
வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த நடைமுறை நீக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரடங்கையும் மீறி மக்கள் சாலைக்கு வருவது அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பாஸ் வழங்கலாம் என்ற பழைய நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் எந்த சரக்கு வாகனங்களையும் தணிக்கை செய்யக்கூடாது என்றும் அனுமதி மறுக்கக்கூடாது என்று டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நோயாளி வருகையால் அலார்ட் : தனிமைப்படுத்தப்பட்ட வங்கி, ஏடிஎம்..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM