கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

சென்னையில் மார்ச் மாதத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. ஏப்ரல் 1-ம் தேதி ஒருவருக்கும் ஏப்ரல் 2-ம் தேதி 20 பேருக்கும் ஏப்ரல் 3-ம் தேதி 35 பேருக்கும் கொரோனா உறுதியாகி மொத்தம் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: டெல்லி டு திருவாரூர் பயணித்த 13 பேரின் டிராவல் ஹிஸ்ட்ரி – தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியவர்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

செய்தியாளர்களைச் இன்று சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், “தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 பேர் உள்ளனர். இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மார்ச் மாதத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. ஏப்ரல் 1-ம் தேதி ஒருவருக்கும் ஏப்ரல் 2-ம் தேதி 20 பேருக்கும் ஏப்ரல் 3-ம் தேதி 35 பேருக்கும் கொரோனா உறுதியாகி மொத்தம் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 24 பேருக்கும் ஏப்ரல் 1-ம் தேதி 2 பேருக்கும் ஏப்ரல் 2-ம் தேதி 6 பேருக்கும் என 32 பேர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 23 பேருக்கும் ஏப்ரல் 1-ம் தேதி 6 பேருக்கும் ஏப்ரல் 2-ம் தேதி ஒருவருக்கும் ஏப்ரல் 3-ம் தேதி 6 பேருக்கும் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமைச்சரின் ட்விட்டர் பதிவு

கோவை மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் ஒருவரும் ஏப்ரல் 1-ம் தேதி 28 பேர் என 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இதுவரை 21 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் 21 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் 43 பேரும் கரூர் மாவட்டத்தில் 20 பேரும் மதுரையில் 15 பேரும் திருப்பத்தூரில் 10 பேரும் விருதுநகரில் 11 பேரும் திருவாரூரில் 12 பேரும் சேலத்தில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையில் 5 பேரும் கன்னியாகுமரியில் 5 பேரும் சிவகங்கையில் 5 பேரும் தூத்துக்குடியில் 9 பேரும் விழுப்புரத்தில் 13 பேரும் காஞ்சிபுரத்தில் 4 பேரும் திருவண்ணாமலையில் 2 பேரும் ராமநாதபுரத்தில் 2 பேரும் திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் தலா ஒருவரும் நாகப்பட்டினத்தில் 5 பேரும் என மொத்தம் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பட்டியல்

இந்தப் பட்டியல் அடிப்படையில் 81 பேர் பாதிக்கப்பட்டு சென்னை மாவட்டம் முதலிடத்திலும் 43 பேர் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் 2-ம் இடத்திலும் திருநெல்வேலி 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 124 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஏப்ரல் 1-ம் தேதி 110 பேரும் ஏப்ரல் 2-ம் தேதி 75 பேரும் ஏப்ரல் 3-ம் தேதி 102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருந்த வீடுகள், தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 8 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.