உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,568ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் புதிதாக 766 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 681 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளும் மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கூறி வருகின்றன. மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அச்சம் காரணமாகக் கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் கடைகளுக்கு முன்பு உரிய வகையில் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

One more death due to corona virus infection in west Bengal number ...

தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று 4 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பரவுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் அவரது குடும்பத்தில் உள்ள 10 பேருக்கு கொரோனாவை பரப்புகிறார். இன்னும் சில வழக்குகளில் கொரோனா தொற்று உள்ள ஒரு நபர் தனது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கு கொரோனாவை பரப்புகிறார். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அன்பானவர்களையும் காப்பாற்ற உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் கொரோனா நோயாளிகளையும் மற்ற நோயாளிகளையும் ஒன்றாகக் கலக்கவில்லை. நாங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனாவுக்கென்று தனி மருத்துவமனைகளை அமைத்து வருகிறோம். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதைச் சிலர் எதிர்க்கின்றனர்.இதைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொற்றுநோய் நோய்கள் சட்டம், 1897 இன் கீழ் படி, இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் அரசுக்கே உண்டு என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்,

Test results of man who died in West Bengal hospital's isolation ...

வீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..!

இதுகுறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். பலர் குணமடைந்து வருகின்றனர். சுவாச கோளாறு மற்றும் சிறுநீரக பிரச்னை இருப்பவர்களைத் தவிரப் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைகிறார்கள். ” எனத் தெரிவித்தார்.

இதனிடையே மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் 5,110 பேரில் 3,218 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 54,965 பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டதில், 2,936 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.