டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 இஸ்லாமியர்கள், முதற் கட்டமாக அடையாளம் காணப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள்.

போலீஸ் விழிப்புணர்வு

வேலூரைச் சேர்ந்த மேலும் பலர், அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கலாம் என்று தகவல் வருவதால், அவர்களிடமிருந்து பிறருக்கு நோய் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன. அவர்களைக் கண்டறிய வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இதுதொடர்பாக, காட்பாடியில் உள்ள ஸ்ரீ ரங்காலயா மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதப் பிரச்சாரகர் என்று அழைக்கப்படும் ஜமாத்தார்கள், ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பேரணாம்பட்டு நுகர்வோர் அமைப்பு சார்பில் இஸ்லாமிய சமூகப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள்

அவர்களிடம் பேசிய கலெக்டர் சண்முகசுந்தரம், ‘‘டெல்லி மத பிரசாரத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களின் விவரங்களைத் தாமாக முன் வந்து கொடுக்க வேண்டும். அதுபோன்ற தகவல்களைத் தெரிவிக்க, மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்கள் 1077, 0416-2258016, 91541 53692 மற்றும் covid19vellore@gmail.com என்ற இ-மெயில் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அரசு பெட்லேண்ட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள், அவர்களது குறைகளைத் தெரிவிக்க வருவாய்த்துறையினர் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் ஏற்படுத்தப்படும். அதற்கென சிறப்பு அலைபேசி எண்கள் ஒதுக்கப்படும்’’ என்றார்.

மீட்கப்பட்ட ஆதரவற்றோர்

மேலும், ‘‘சமூக வலைதளங்களில் விஷமத் தனமான வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் எஸ்பி பிரவேஷ்குமார் எச்சரித்தார். அதையடுத்துப் பேசிய இஸ்லாமியப் பிரதிநிதிகள், ‘‘கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தருகிறோம்’’ என்று உறுதியளித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.