உசிலம்பட்டி அருகே மாவட்ட ஆட்சியரின் தடையை மீறி, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி பிரிட்டீசாரால் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் 100வது ஆண்டு நினைவு தினத்தில் மக்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வாக பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் படுகொலை கருதப்படுகிறது. அதற்கு இணையாக மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டை குறிப்பிடலாம். குற்றப் பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் மக்கள் மீது ஆங்கிலேய அரசு 3.04.1920 இல் துப்பாக்கிச் சூடு நடத்தியது அதில் மாயக்காள் என்ற பெண் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர்.
“ஈவு இரக்கம் பார்க்காதீங்க” : தூத்துக்குடி டி.எஸ்.பி. அலார்ட் ஆடியோவால் முடங்கிய மக்கள்
இச்சம்பவத்தின் 100 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நினைவு தினத்திற்கு தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக யாரும் வரக்கூடாது எனவும், அனைவரும் வீட்டில் இருந்தவாரு அனுசரித்துக் கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பெருங்காமநல்லூரில் பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெருங்காமநல்லூரைச் சேர்ந்த வீரமங்கை மாயக்காள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் விதித்த தடையை மீறியும் தியாகிகள் சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் தியாகிகளின் நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தவும் முயன்றனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM