பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்த லாக் டவுனில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும்போது, வெறுமனே டிவி, செல்போன் என முடங்கிப்போய் விடாமல் நம்முடைய குடும்பத்தினருடன் அன்பை பகிர்ந்துகொள்ள சிறுசிறு விளையாட்டுகளை விளையாடலாம்.

இவற்றால் பொழுது இனிமையாகக் கழிவது மட்டுமல்லாது, குடும்ப உறுப்பினர்கள் இடையே அன்பு அதிகரிக்கும்.

மேலும், இவற்றால் குழந்தைகளின் சுயசிந்தனை வளரும். அறிவுத்திறனும் கற்பனை ஆற்றலும் மேம்படும்.

Representational Image

1. நேர்மைக் கடை:

(Honest shop)

குடும்ப உறுப்பினர்களால் வரையறுக்கப்பட்ட Task-ஐ முடித்தால் டைனிங் டேபிளில் உள்ள நொறுக்குத் தீனிகளைக் குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம் என விளையாடலாம். உதாரணமாக, புத்தகத்தில் 10 பக்கங்கள் படித்தல், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல், புத்தகங்களை அடுக்கி வைத்தல் என Task-குகளை வரையறுக்கலாம்.

நேர்மைக் கடை எனும்போது அவரவர்களே நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Task முடிப்பதையோ Snacks எடுப்பதையோ யாரும் கண்காணிக்கக் கூடாது என்பது அவசியம். இந்தக் கடையில் Snacks எடுப்பதற்குத் தேவை பணம் அல்ல நேர்மை.

“நேர்மையைக் கடைப்பிடிப்பது பிறருக்காக இல்லை, தனக்காக” எனும் பழக்கம் வளரும்.

2. கொடுப்பதில் மகிழ்ச்சி:

(Joy of giving)

இதன்படி தினசரி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பொருளை கொடுக்க வேண்டும் என விளையாடலாம்.

கொடுக்கக்கூடிய பொருள் பெறுபவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்.

இதற்கென புதியதாக வாங்கப்படக் கூடாது.

தம்மிடம் உள்ளதையோ, தாமே உருவாக்கியோ வழங்கலாம் என விதிமுறை வைக்கலாம்.

குடும்ப உறுப்பினர்கள் தினசரி ஒரு பொருள் என்று மட்டும் இல்லாது எத்தனை முடியுமோ அத்தனை பொருள்களைக் கொடுக்கலாம். “பிறருக்கு கொடுக்கும்போது நம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும்” என்பதே இந்த விளையாட்டின் மையக்கருத்து. இதனால், பிறருக்கு கொடுக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியை அனைவரும் உணர முடியும்.

Representational Image

3. தொடர் கதைகள்:

(Relay stories)

டி.வி-யே கதியென பழைய தொடர்கள் பார்த்துக் கொண்டிருக்காமல், குடும்பத்தில் உள்ள நபர்கள் தொடர் கதைகளை உருவாக்கி விளையாடலாம். ஒரு கதையை ஒருவர் கற்பனையாக ஆரம்பிக்க, பிறர் அதை அப்படியே கற்பனையில் தொடர்ந்து இறுதியில் நேர்மறையாக முடியுமாறு கதைகளை உருவாக்கி மகிழலாம்.

இதற்கென தினமும் ஒரு மணி நேரம் எனக் குறிப்பிட்ட கால அளவு வரையறுத்துக் கொள்ளலாம். தினம் ஒரு கதையை இவ்வாறு உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கியோர்க்கு பகிரலாம்.

“இதனால் கற்பனை ஆற்றலும் ஆக்கத்திறனும் மேம்படும்.”

4. வாக்கெடுப்பு விளையாட்டு:

(Voting game)

இன்று என்ன உணவு சமைக்கலாம் என்பதை குடும்ப உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடலாம். நான்கு அல்லது ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கலாம்.

வாக்கெடுப்பிற்கென சிறு பெட்டி தயார் செய்து, தேர்தல் போலவே அவரவர் விருப்பமான உணவுப்பொருளின் பெயரை பெட்டியில் எழுதிப் போடச் சொல்லலாம்.

இதன் மூலம் குடும்பத்தினருடன் இனிமையாகப் பொழுது கழிவது மட்டுமல்லாது, பெரும்பான்மையோருக்கு விருப்பமான உணவு வீட்டில் தயார் செய்யப்படும்.

“பெரும்பான்மை எனும் மக்களாட்சி மரபுப் புரிதல் குழந்தைகளுக்கு ஏற்படும்.”

Representational Image

5. வார்த்தை விளையாட்டு:

(Word game)

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து பிறர் அறியாத வண்ணம் அதில் உள்ள குறிப்பிட்ட ஒரு சொல்லை பிறரிடம் கூறிவிட்டு புத்தகத்தை அவர்களிடம் கொடுத்துவிடலாம். அந்தச் சொல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் உள்ளது என்பதை மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த வார்த்தை விளையாட்டால் “நேரம் உபயோகமாகக் கழிவது மட்டுமன்றி, வாசித்தல் பழக்கம் மேம்படுவது உறுதி.”

6. உணவு உருவாக்கல்:

(Make a dish)

குடும்பத்தில் இதுவரை சமைக்காத, கேள்விப்பட்டிராத ஏதேனும் புதிய உணவு வகைகளை முயற்சி செய்யலாம்.

குடும்ப நபர்கள் அனைவரின் துணையுடன் இத்தகைய உணவை தயார் செய்யலாம்.

நன்றாக இருந்தால் உணவு வகைகளின் ரெசிபிகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

“நமக்கு புதிய சுவையில் உணவு கிடைக்கும். அது மட்டுமன்றி இந்த விடுமுறையில் எண்ணற்ற ரெசிபிகள் உருவாக வாய்ப்புண்டு.”

Representational Image

7. கட்டளை நேரம்:

(Command time)

கட்டளை நேரத்தை சரியாக நினைவில் வைத்திருக்கும் நபர் கமாண்ட் என்று கூறி கூறக்கூடிய டாஸ்க்குகளை மற்றவர்கள் செய்ய வேண்டும். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களைக் கட்டளை நேரங்களாக முன்கூட்டியே வரையறுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி விளையாடும்போதுகூட டாஸ்க்குகள் முடிவில் அடுத்த கமாண்ட் டைம்களையும் கூறலாம்.

கொடுக்கக்கூடிய டாஸ்க்குகள் கடினமானவையாக இல்லாமல் வேடிக்கையானவையாக, பயனுள்ளவையாக இருக்க வேண்டும்.

“இந்த விளையாட்டினால் நினைவுத்திறன் மேம்பட வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு கீழ்ப்படிதல் பண்பும் வளரும்.”

8. எண் விளையாட்டு:

(Number game)

ஒருவர் குறிப்பிட்ட பொருளின் வகையை மட்டும் கூறிவிட்டு, 1 முதல் 10 வரை எண்ண வேண்டும். உதாரணமாக இனிப்பு என்று கூறிவிட்டு ஒருவர் எண்களை எண்ண ஆரம்பித்தால், அடுத்தவர் லட்டு, மைசூர்பா என எண்ணிக்கை முடிவதற்குள் வேகமாக நிறைய இனிப்புகளைக் கூற வேண்டும்.

“இந்த விளையாட்டால் வேகமாகச் சிந்திக்கும் ஆற்றல் வளரும்.”

Representational Image

9. யார் அவர் விளையாட்டு:

(Find a person)

குடும்ப உறுப்பினர்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களில் யாரேனும் ஒருவர் குறித்த குறிப்புகளை ஒவ்வொன்றாக ஒருவர் கூறிக்கொண்டே வர, அவர் யார் எனப் பிறர் கண்டுபிடித்து விளையாடலாம்.

“குறிப்பிட்ட நபர் குறித்த குடும்பத்தினரின் புரிதலும், அவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களும் இதன் மூலம் வெளிப்படும்.”

10. செய்தித்தாள் விளையாட்டு:

(News paper game)

சிறு சிறு குறிப்புகள் கொடுத்து செய்தித்தாளில் உள்ள எந்தச் செய்தி அல்லது படம் குறித்த குறிப்பு அது என மற்றவரைக் கண்டுபிடிக்கச் செய்யலாம்.

குழந்தைகளுக்கு செய்தித்தாளில் உள்ள படங்களை, குறிப்புகளாகக் கொடுக்கலாம்.

“இதன் மூலம் செய்திகளை அனைவரும் முழுமையாகப் படிப்பது மட்டுமன்றி, இனிமையாக பொழுது கழிவதும் உறுதி.”

அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.