மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை!

கொரோனா

தமிழகத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களுடனும் தலைமைச் செயலர் சண்முகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற பலருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 264 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் மத ரீதியான பல்வேறு கருத்துகள் பரவிவருகின்றன. தமிழகத்தில் இதைத் தவிர்க்க அனைத்து மதத் தலைவர்களுடனும் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.