கடந்த டிசம்பரில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 62 பேரின் இறப்பும் நிகழ்ந்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.

Also Read: `டோர் டெலிவரி; மஞ்சள் நிற வளையம்!’ -கொரோனா தடுப்பில் அதிரடி காட்டும் தஞ்சை ஆட்சியர்

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸ்

மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு 1.76 கோடி நிதியுதவியை பல்வேறு திட்டங்கள் கீழ் அறிவித்தது. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதோனம் இன்று வழங்கிய பேட்டியொன்றில் “உலகில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். நான் எல்லா நாடுகளிடமும் கோரிக்கை ஒன்றை வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். உங்கள் நாட்டில் இருக்கும் மக்கள் பசியில்லாமல் உறங்குகிறார்களா? கடைக் கோடியில் இருக்கும் மக்களுக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அந்தப் பொறுப்பு உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இதுபோன்ற அசாதரண சூழலைச் சமாளிக்க பல வளர்ந்த நாடுகளே திணறி வரும் சூழலில், இந்தியா இந்த ஊரடங்கு நாள்களில் மக்களின் வாழ்வியல் முறையைச் சரியாகக் கையாண்டு வருகிறது. பிரதமர் மோடி தன்னுடைய மக்களுக்காக அறிவித்த நிதி உதவித்திட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவை. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 24 பில்லியன் மக்கள் பலனடையப் போகிறார்கள்.

குறிப்பாக ஜன் தன் யோஜனா, உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காஸ், அன்ன யோஜன்னா திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு வழங்கப்படும் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் மூலமாகவும் பல மக்கள் பலனடைந்து வருகிறார்கள். இந்தியாவின் இதுபோன்ற செயல்திட்டங்களை உலக நாடுகளே வியந்து பார்க்கிறது. இந்திய மக்களும் அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இந்திய மக்களும் பாராட்டுக்குரியவர்கள்” என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.