கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. சமீபத்தில் நடக்கவிருந்த உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் முதல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரை எல்லாமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 8 முதல் மே 3 வரை நடக்கவிருந்த அனைத்து மோட்டோ ஜிபி ரேஸ்களும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன. இப்போது எல்லோருக்குமே வொர்க் ஃபிரம் ஹோம் போல ரேஸர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்திருக்கிறது மோட்டோ ஜிபி.

மோட்டோ ஜிபி விர்ச்சுவல் ரேஸ்

டிராக்கில் பைக் ஓட்டவில்லை என்றால் நம் ரசிகர்களை உற்சாகப்படுத்த விர்ச்சுவல் முறையில், வீடியோகேமில் பைக் ஓட்டுவோம் என களமிறங்கிவிட்டார்கள் ரேஸர்கள்.

மோட்டோ ஜிபி விர்ச்சுவல் ரேஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டோ ஜிபி 19 (MotoGP19) என்ற வீடியோ கேமில் நடத்தப்பட்ட ரேஸை லைவாக மோட்டோ ஜிபியின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பியுள்ளார்கள். வரலாற்றில் இதுதான் முதல்முறையாக மோட்டோ ஜிபி ரேஸ், வீடியோ கேமில் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் முஜெல்லோ ரேஸ் டிராக்கில்தான் முதல் ரேஸ் நடைபெற்றுள்ளது. மொத்தம் 6 லேப். பந்தயம் தொடங்குவதற்கு முன், ஐந்து நிமிடம் குவாலிஃபயர் சுற்று. கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்குத் தொடங்கிய‌‌ ரேஸ் முழுமையாக motogp.com, esport.motogp.com மற்றும் இதன் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

மோட்டோ ஜிபி விர்ச்சுவல் ரேஸ்

மொத்தம் 10 ரேஸர்கள் பங்குபெற்ற இந்த ரேஸில் அலெக்ஸ் மார்க்வெஸ், 6 லேப்களை 10 நிமிடம் 38.643 நொடிகளில் முடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். பந்தயம் தொடங்கும்போது ஃப்ரென்ச் வீரர் ஃபேபியோ குவாட்ராரோ முன்னிலையில் இருந்தார். ஆனால், மேவரிக் வினேஸ் உடன் ஏற்பட்ட மோதலில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இதனால் பின் வரிசையில் இருந்த மார்க்வெஸ் மற்றும் பக்னாயா பந்தயத்தில் முந்திச் சென்றனர். இந்த வீடியோ கேமில் நடந்தப்பட்ட ரேஸ் நிஜ ரேஸ் போலவே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மோட்டோ ஜிபி
மோட்டோ ஜிபி
மோட்டோ ஜிபி
மோட்டோ ஜிபி
மோட்டோ ஜிபி

சமூக வலைதளங்களில் #StayAtHomeGP என்ற ஹாஷ்டேகுடன் ரேஸ் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர் ரேஸர்கள். 10 ரேஸர்கள் இருந்தாலும், தலைவன் வேலன்ட்டினோ ராஸி எங்கடா என கேட்டுக் கமென்ட்ஸில் கொந்தளிக்கிறார்கள் சில ரசிகர்கள்.

ரேஸ் முடிவுகள்

  1. அலெக்ஸ் மார்க்வெஸ், 6 லேப்ஸ், 10m 38.643s

  2. பிரான்செஸ்கோ பாக்னியா, + 7.093s

  3. மேவரிக் வினேல்ஸ், + 8.496s

  4. ஃபேபியோ குவார்டாரோ, + 9.968s

  5. மார்க் மார்க்வெஸ், + 14.416s

  6. அலெக்ஸ் ரின்ஸ், + 19.548s

  7. ஜோன் மிர், + 23.247s

  8. மிகுவல் ஒலிவேரா, + 29.702s

  9. இக்கர் லெக்குயோனா, NC

  10. அலிக்ஸ் எஸ்பர்கரோ,NC

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.