உலக வழக்கின் அத்தனை பாகுபாடுகளையும் தகர்த்து, அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினர், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எனப் பலர் பாதிப்படைந்தும் உயிரிழந்தும் வருகின்றனர்.

corona

அந்த வரிசையில், இந்திய வம்சாவளி ஆப்பிரிக்கரும் உலகின் பிரபல வைராலஜிஸ்ட்டுமான கீதா ராம்ஜி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கீதா ராம்ஜி, கொரோனா தொற்றால் உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனிலிருந்து ஆப்பிரிக்காவின் டர்பனுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் கூறப்படுகிறது.

கீதா ராம்ஜி, சிறு வயதில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் வளர்ந்தார். 1970-களின் முற்பகுதியில், இடி அமின் ஆட்சிக் காலத்தில், குடும்பத்துடன் இந்தியாவிற்குத் திரும்பிய கீதா ராம்ஜி, பிறகு லண்டன் சென்றார். 1980-களில் இங்கிலாந்தில் வேதியியல் மற்றும் உடலியல் துறையில் பட்டம் பெற்ற பின்னர், கணவருடன் தென்னாப்பிரிக்கா சென்றார்.

வைராலஜிஸ்ட் கீதா ராம்ஜி

1994-ம் ஆண்டு, டர்பனில் குழந்தை நல மருத்துவத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். அதன்பின், ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்க் கொல்லி நோயாக இருந்த ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்குள்ளாகிய பெண்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மேலும், காசநோய்க்கு எதிர்ப்பு விஷயங்களிலும் ஈடுபடட்டிருந்தார்.

Also Read: `வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும்… வீட்டுக்குள் வரும்போதும்!’ – #Corona பாதுகாப்பு ஆலோசனைகள்

தென்னாப்பிரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஹெச்.ஐ.வி தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரியாகப் பொறுப்பிலிருந்தார். அப்போது, ஹெச்.ஐ.வி வைரஸுக்கான தடுப்பு மருந்துகள், தற்காப்பு விஷயங்கள் போன்றவற்றைக் கண்டறியும் சோதனைகளில் மேற்பார்வையாளராக இருந்தார்.

Medicines

வளரும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ கூட்டமைப்பு சார்பில், ஹெச்.ஐ.வி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக, 2018-ம் ஆண்டு, சிறந்த பெண் விஞ்ஞானிக்கான விருதைப் பெற்றார்.

64 வயதாகும் பிரபல வைராலஜிஸ்ட் கீதா ராம்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், கிழக்கு ஆப்பிரிக்க அறிவியலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.