திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வி.எஸ்.ஞானவேலன், மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர், மதனாஞ்சேரியில் உள்ள தனக்குச் சொந்தமான பெரிய கட்டடத்தை ‘கொரோனா’ தடுப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள தற்காலிகமாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஞானவேலன் கொடுத்த அலுவலக கட்டடம்

நம்மிடம் பேசிய ஞானவேலன், ‘‘அது, என்னுடைய சொந்தக் கட்டடம். ‘தளபதி அறிவாலயம்’ என்று பெயரிட்டுள்ளேன். 3,000 சதுர அடியில், ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டிமுடித்து, மறைந்த பேராசிரியர் அன்பழகனை 2016-ம் ஆண்டு வரவழைத்து திறப்பு விழா நடத்தினேன். பேராசிரியர்தான் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தவர்.

கலெக்டர் சிவன் அருளுக்கு இ-மெயில் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். அவரும் வரவேற்றுள்ளார். இந்தக் கட்டடம் விசாலமான இடத்தில் அமைந்திருக்கிறது. ‘கொரோனா’ பரிசோதனை மையமாகவோ, அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தும் முகாமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

தி.மு.க நிர்வாகி வி.எஸ்.ஞானவேலன்

20 படுக்கைகள் வரை இடைவெளி விட்டு அமைக்கலாம். மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டால் படுக்கை வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக உள்ளேன். வேறு எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்’’ என்றார், மனித நேயத்துடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.