தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதில், 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக பார்க்கலாம்.
சென்னை – 16, ஈரோடு – 32, நெல்லை – 30, கோவை – 29, தேனி – 20, நாமக்கல் – 18, செங்கல்பட்டு – 18, திண்டுக்கல் – 17, கரூர் – 17, மதுரை – 15, திருப்பத்தூர் – 10, விருதுநகர் – 10, திருவாரூர் – 7, சேலம் – 6, ராணிப்பேட்டை – 5, கன்னியாகுமரி – 5, சிவகங்கை – 5, தூத்துக்குடி – 5, விழுப்புரம் – 3, காஞ்சிபுரம் – 3, திருவண்ணாமலை – 2, ராமநாதபுரம் – 2, திருவள்ளூர் – 1, வேலூர் – 1, தஞ்சாவூர் – 1, திருப்பூர் – 1.
“முதல்நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கேட்பவர்களை தவறவிடுகிறேன்” – அர்ச்சனா கல்பாத்தி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM