ரயில்வே டிக்கெட் முன்பதிவு பணியானது ஏப்ரல் 15 தேதியிலிருந்து இயங்கும் என்று வெளியான தகவல் தவறானது என ரயில்வே துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போது வரை 2032 நபர்கள் பாதிக்கபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 234 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள், கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரயில்கள், பள்ளிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், மக்களிடம் ஆன்லைன் பயன்பாடு என்பது முன்பை விட அதிகரித்துள்ளது. இதில் அவ்வப்போது கொரோனா குறித்த தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
தோனி, கோலி இல்லாத இந்திய அணி ? தேர்வு செய்த ஷேன் வார்னே !
ஹெச்.டி.எப்.சி வங்கியில் இ.எம்.ஐ கட்டுபவரா நீங்கள்..?: இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!
இதனை தொடர்ந்து, ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு செய்யும் பணியானது, ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து ரயிலில் முன்பதிவு செய்யும் பணியானது தொடங்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது. ரயிலில் முன்பதிவு செய்து சேவையானது நிறுத்தப்படவில்லை. ஊரடங்கு நாட்களில் ரயிலில் செல்வதற்கு முன்பதிவு செய்தவர்களின் பயணம் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்களில் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு என்பது 120 நாட்களுக்கு முன்பு வரை பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM