பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கிராம நலச் சங்கங்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். கொரோனா லாக்-டவுண் சூழலால் கிராம நலச் சங்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீயத்தூர் கிராம நலச் சங்கத்தின் செயல்பாட்டை நேரில் பார்த்து அசந்துபோய்விட்டேன். அதுகுறித்து இங்கே பகிர்கிறேன். மற்ற கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் இருந்து சுமார் 25 கி.மீதொலைவில் உள்ளது தீயத்தூர் கிராமம். இங்கு, பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். பிழைப்புக்காக சிலர் வெளிநாடுகளில் பணிபுரி கின்றனர்.

தீயத்தூர் கிராம நலச் சங்கம்

இங்கு அனைத்து சமூக மக்களும் வசித்துவந்தாலும் அனைவரும் ஒருங்கிணைந்து, தீயத்தூர் கிராம நலச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டு, உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு இப்போதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து, முன்னோடி கிராமமாக மாற்றுவதற்கான ஒரு தளமாக இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள், நோக்கம், விதிமுறைகள், துணை விதிகள், எதிர்காலத் திட்டங்கள் எனப் பலவும் முறைப்படி செய்யப்பட்டுள்ளன. ரூ.1,500 சந்தா கட்டணமாகச் செலுத்தி, இந்தச் சங்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராய் சேர்ந்துள்ளனர். சேர்ந்தும் வருகின்றனர். இந்தச் சங்கத்தை சட்டபூர்வமாகப் பதிவுசெய்யும் பணியும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தீயத்தூர் கிராம நல சங்கம்

இச்சூழலில், உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் தலைதூக்கி உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. இதனால் இக்கிராம மக்கள் காய்கறிகள் வாங்குவதற்கும் மற்ற தேவைகளுக்கும் வெளியில் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.

தனது கிராம மக்களின் இந்தத் தேவையை உணர்ந்த தீயத்தூர் கிராம நலச் சங்கம், கிராமத்தில் உள்ள 180 குடும்பங்களுக்கும் இலவசமாக காய்கறிகளை வழங்குவது என முடிவுசெய்தனர். இதற்காக, மொத்த விலைக்கடையில் காய்கறிகளை வாங்கிவந்து குவித்து, தனித்தனி பைகளில் மிகச் சரியாக அளவீடு செய்து, சமூக விலகல் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் அவைகளை பேக்கிங் செய்தனர்.

ஒவ்வொரு பையிலும் தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, கத்திரி, காரட், பச்சை மிளகாய், வாழைக்காய், சௌசௌ, உருளைக் கிழங்கு, கருவேப்பிலை ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பையிலும் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளின் மதிப்பு ரூ.400 முதல் 500 இருக்கும். இதற்காக, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கொடுத்த தங்கள் சொந்தப் பணத்திலிருந்து இந்தக் காய்கறிகளைக் கொள்முதல்செய்து, சங்கத்தின் சார்பில் கிராமத்திற்கு வழங்கி யுள்ளனர்.

தீயத்தூர் கிராம நல சங்கம்

சாதி, மதம் என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் 180 குடும்பத்தினருக்கும் இந்தக் காய்கறிகள் கொண்ட பை தொகுப்பினை சமூக விலகல் அடிப்படையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கிராம நலச் சங்க உறுப்பினர்கள் வழங்கினர். வேர்விடும் நிலையில் இருக்கும் இச்சங்கத்தின் முதல் பணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராம நலச் சங்கம் முளைவிடத் தொடங்கும்பொதே, ஒட்டு மொத்த கிராமமும் பயன்பெறும் வகையில் தக்க நேரத்தில் அனைத்துக் குடும்பத்தினருக்கும் காய்கறி தொகுப்புப் பைகளை வழங்கியிருப்பது, தீயத்தூர் கிராம மக்களுக்கும் அந்த கிராம நலச் சங்கத்திற்கும் கூடுதல் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.