மதம் இல்லை, சாதி இல்லை, மனிதம் மட்டுமே என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிதிக்கு ஆதரவாக தான் தெரிவித்த கருத்தை விமர்சித்தவர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால், புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் உணவின்றி தவிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். அதனை தடுக்க அரசுகள் அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அத்துடன் பல்வேறு தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிதி தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி, அதன்மூலம் சேவைகள் செய்து வருகின்றார்.

image

இதனை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். அவரது பதிவில், “இது பரிசோதனை காலம். இந்த காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆதரவு இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் சேவை செய்து வரும் அஃப்ரிதி மற்றும் அவரது தொண்டு நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன்” என தெரிவித்திருந்தார். அத்துடன் தங்களால் முடிந்த நிதியை அளிக்குமாறும் கோரியிருந்தார். இதேபோன்று ஹர்பஜன் சிங்கும் அஃப்ரிதியை பாராட்டியிருந்தார்.

அவரது பதிவிற்கு எதிராக பலர் விமர்சனங்களை வைத்திருந்தனர். அஃப்ரிதிடி உதவுகிறார் என்பது தெரியும், அதேபோன்று நீங்கள் உதவுங்கள் என தெரிவித்திருந்தனர்.

image

இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஹர்பஜன் ஒரு ட்விட்டை பதிவு செய்துள்ளார். அதில், “மதம் இல்லை, சாதி இல்லை, மனிதம் மட்டுமே. அது தான் இது. வீட்டில் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள். அன்பை பரப்புங்கள். வைரஸையும் வெறுப்பையும் பரப்பாதீர்கள். அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

கிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.