சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இன்று உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 9.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 49,000-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. எளிதாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த சமூக விலகல் மட்டுமே இன்று ஒரே தீர்வாக இருந்து வருகிறது. இதனால், பல நாடுகளும் மக்கள் கூட்டம் கூடாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கவலைக்குரிய இந்தச் சூழ்நிலையிலும் உலகில் மனிதநேயத்தைக் காட்டும் செயல்களும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்த வண்ணம்தான் உள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பல நாடுகளிலும் அத்தியாவசியப் பொருள்களுக்காக செயல்படும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவில் உள்ள மேடிசன் எனும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியின் கல்வியை இந்த ஊரடங்கு நிறுத்திவிடவில்லை எனலாம். அந்தச் சிறுமி வீட்டில் இருந்தபடி படித்து வந்துள்ளார். அவரால், கணிதப்பாடத்தில் வந்த ஒரு கணக்கை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, தனது கணித ஆசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

Also Read: கொரோனா பரவல்… நெரிசலில் வாழ்வோர், மலைப் பிரதேசவாசிகளுக்கான பாதுகாப்பு ஆலோசனைகள்!VikatanPhotoCards

ஆசிரியர் மின்னஞ்சலில் பதிலளிக்காமல் நேரடியாக அவருடையே வீட்டுக்கே சென்றுள்ளார். சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் ஆசிரியர் வித்தியாசமான முறையில் சிறுமியின் சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளார். வெள்ளைப் பலகையை சிறுமியின் வீட்டுக்கு முன்பு வைத்துள்ளார். சிறுமி வீட்டின் வாயிலில் இருந்த கண்ணாடி கதவுக்குப் பின்னால் நின்றுள்ளார். இப்படியான சூழலில் சிறுமிக்கு கணிதப்பாடத்தை நடத்தியுள்ளார்.

கிறிஸ்வாபாவின் ட்விட்டர் பக்கம்

சிறுமியின் தந்தையான ஜோஷ் ஆண்டர்சன் இந்தக் காட்சியை புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “என் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறார். கணிதப்பாடத்தில் ஏற்பட்ட சந்தேகம் குறித்து அவரது ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அவர் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தியுள்ளார்” என்று கேப்ஷனில் எழுதியுள்ளார். கிறிஸ்வாபா என்று பெயருடைய அந்த ஆசிரியரையும் அந்தப் பதிவில் டேக் செய்துள்ளார். இவரின் பதிவு நெட்டிசன்களை அதிகமாகக் கவர்ந்துள்ளது.

“டீச்சர் ஆஃப் தி இயர், இப்படியான ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்கள், விலைமதிப்பற்ற ஆசிரியர், எவ்வளவு கிரியேட்டிவான ஆசிரியர்” போன்ற கமென்டுகளை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: `டோர் டெலிவரி; மஞ்சள் நிற வளையம்!’ -கொரோனா தடுப்பில் அதிரடி காட்டும் தஞ்சை ஆட்சியர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.