உலகளவில் கொரோனாவின் தாக்கத்தால் F1 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், ஏழு F1 அணிகளைச் சேர்ந்த உலகின் முன்னணி பொறியாளர்கள் எல்லோரும் கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற புராஜக்ட் பிட்லேன் என்ற அணியைத் தொடங்கி உதவிசெய்துவருகிறார்கள். இந்த வேலைகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க மெர்சிடீஸ்-AMG ஃபார்முலா 1 அணியின் பொறியாளர்கள் ஒன்றுசேர்ந்து 100 மணிநேரத்தில் கையடக்க வென்ட்டிலேட்டர் கருவியைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

கொரோனா

Continuous Positive Airway Pressure (CPAP) என்பது இந்தக் கருவியின் பொதுப் பெயர். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த, பெரிய வென்ட்டிலேட்டருக்குப் பதிலாக இந்தக் கருவியை உலகளவில் பல மருத்துவமனைகள் பயன்படுத்திவருகின்றன. டேபிளில் வைக்கும் அளவுக்கு சிறியதாக இருக்கும் இந்தக் கருவி கொரோனா பாதித்தவர்களுக்குச் சுவாசிக்க உதவி அவர்களின் உயிரைக் காப்பாற்றும்.

இந்த CPAP கருவியை இன்னும் சிறிதாகவும், தயாரிக்க சுலபமாகவும் மாற்றிக்கொடுத்திருக்கிறார்கள் மெர்சிடீஸ் பொறியாளர்கள். இதை இவர்கள் லண்டனில் இருக்கும் UCL பல்கலைக்கழக பொறியாளர்களுடன் இணைந்து செய்திருக்கிறார்கள். மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் அனைத்தும் ஐசியு-வில் மட்டுமே இருக்கின்றன. இதன் கையிருப்பும் மிகவும் குறைவு, விலையும் அதிகம். அதனால், இந்த CPAP கருவியை சாதாரண நிலையில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு, மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நபர்களுக்கு ஐசியு-வில் இருக்கும் வென்ட்டிலேட்டர்களைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.

மெர்சிடீஸ் வென்ட்டிலேட்டர் (CPAP)

ஏற்கெனவே இருக்கும் CPAP கருவியை ரிவர்ஸ் இன்ஜினீயரிங் மூலம் மீண்டும் டிசைன் செய்து குறைவான நேரத்தில் இதை உற்பத்தி செய்யும்படி மாற்றியுள்ளார்கள். இந்தக் கருவியை இங்கிலாந்து அரசு அங்கீகரித்து ஏற்கெனவே இதை மருத்துவமனைகளுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஒரு நாளைக்கு 1000 கருவிகளை உருவாக்கமுடியும் என்று கூறியிருக்கிறது இந்த மெர்சிடீஸ் டீம். 

இதேபோல இந்தியாவில் மஹிந்திரா மற்றும் மாருதி போன்ற நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களைச் செய்து கொடுக்க சில நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.