கேரளாவில் மார்ச் 11-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டது முதல், நாள்தோறும் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இன்று (ஏப்ரல் 2) காலையில் புதிதாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ்

கொரோனா பாதித்தவர்களில் 25 பேர் குணமடைந்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. அந்த மாவட்டத்தில் மட்டும் 78 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருக்கமாகப் பழகியவர்களை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி கேரளாவில் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

தனிமையில் இருப்பவர்களுக்கு தங்களுடைய நேரத்தைச் செலவு செய்வதில் சிக்கல் இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லாத நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதில் பலரும் சோர்வடைகிறார்கள்.

வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கும் வகையில், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுக்காவுக்கு உட்பட்ட வாகமன் காவல்நிலைய இன்ஸ்பெக்டரான ஆர்.ஜெயசனில் என்பவர் தன் எல்லைக்குள் இருப்பவர்களுக்கு புத்தகங்களை வழங்கிப் படிக்க வைக்கிறார். 

புத்தகம் விநியோகிக்கும் போலீஸார்

காவல்துறை அதிகாரி மட்டுமல்லாமல் எழுத்தாளருமான ஆர்.ஜெயசனில், தன்னிடம் உள்ள மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 100 உலக இலக்கியப் புத்தகங்களை இதற்காக ஒதுக்கியிருக்கிறார்.

மக்ஸிம் கார்கியின் `தாய்’, லீவிஸ் கரோலின் `ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’, ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் `குற்றமும் தண்டனையும்’, ஆர்தர் கானன் டாயில் எழுதிய `ஷெர்லாக் ஹோம்ஸ்’, ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய `தி ஜங்கிள் புக்’ உள்ளிட்ட தரமான பல்வேறு புத்தகங்களை போலீஸார் விநியோகிக்கின்றனர். 

’தாய்’ நாவல்

இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு அதற்கான மதிப்புரையை எழுதி காவல்நிலையத்தில் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் புத்தகங்கள் கொடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மலையாள மக்கள், தங்களுக்குப் புத்தகம் வாசிக்கும் அனுபவம் புதிய அனுபவத்தைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.