ஆசிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் இரான் நாடு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இரானில் 3,000 பேர் கொரோனா தாக்கி இறந்துள்ளனர். 47,593 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, அணு ஆயுத விவகாரத்தால் அமெரிக்கா தங்கள் நாடு மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட கருவிகள் கிடைப்பதில்லை.

corona virus

இதனால், கொரோனாவுக்கு உரிய மருத்துவம் அளிக்க முடியாமல் தவிப்பதாக இரான் அரசு கவலை தெரிவித்திருந்தது. ஆனாலும், இரான் அதிபர் ஹசன் ரூஹானி, அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இரான் கொரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் இரான் நாட்டுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்களை அனுப்பிவைத்துள்ளன. 2018-ம் ஆண்டு அணு ஆயுத விவகாரம் காரணமாக இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்திருந்தது . அதற்குப் பிறகு, முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரான் நாட்டுக்கு உதவி கிடைத்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சர்வதேச அரசியலில் இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இரானுக்கு அமெரிக்கா உதவ முன்வந்தது. ஆனால், அமெரிக்காவிடமிருந்து எந்த உதவியையும் பெற மாட்டோம் என்று இரான் உறுதிபடத் தெரிவித்துவிட்டது.

Also Read: `எங்கள் பணிக்குக் கிடைத்த பரிசு இது..!’ – 5 வயதுச் சிறுவனின் செயலால் நெகிழ்ந்த தஞ்சை இன்ஸ்பெக்டர்

”தடையை விதித்து விட்டு உதவி செய்வதாகக்கூறுவது விசித்திரமாக இருக்கிறது. அமெரிக்கா கொடூரமான மற்றும் தீய சிந்தனைகொண்ட எதிரி” என்று இரான் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.