இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாக அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.

கொரோனா

இந்தியா முழுவதிலும் 1600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட, அதில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களும் அடக்கம் என்பது வேதனையளிக்கிறது. டெல்லி ஸ்டேட் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வேலை செய்யும் 35 வயது மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கே வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தப்பட்டது.

கடந்த புதன்கிழமை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், `தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தயாரிப்பை அதிகப்படுத்த முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. இதனால் மருத்துவப் பணியாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் அவசியம் இப்போது மேலோங்கி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

இதைப் பற்றி கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், “மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாதுகாப்பு உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழிசெய்ய வலியுறுத்திருக்கிறேன். தொழிலதிபர்கள் பணத்துக்குப் பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் தானமாக அளிக்க வேண்டுகிறேன்” என்றார்.

இத்தாலி மருத்துவர்கள்!

கடந்த புதன்கிழமை, இந்தப் பிரச்னையில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் “உலக சுகாதார மையம் பரிந்துரை செய்த பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் கொரோனா பாதித்த நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

“ போரின்போது உயிரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்கும் வீரர்களுக்கு நாம் எப்படிக் கடமைப்பட்டிருக்கிறோமோ, அதே போலதான் இன்று மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் நோயின் தீவிரம் அறிந்து மக்களுக்காகப் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அளிப்பது இப்போது அரசின் தலையாய கடமை” என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், கொரோனா பணியிலிருக்கும்போது நோய்த்தொற்றால் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு அறிவித்திருக்கிறார்.

கொரோனா

நாள்கள் கடக்க, நோயாளிகள் எண்ணிக்கையும், பாதுகாப்பு உபகரணங்களின் தேவையும் அதிகமாகும். இதை உணர்ந்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து, நோயின் தீவிரம் அறிந்து மக்கள் அனைவரும் வீட்டில் தங்குவது நலம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.