கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் டிராவல் ஹிஸ்டரியை வாட்ஸ்அப் கார்டாகப் பகிர்ந்து எச்சரிக்கை செய்கிறது.

மேலும், அடுத்த கட்டமாகப் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. `GCC CORONA Monitoring’ என்னும் ஆப் மூலம், சென்னை மக்களை காய்ச்சல் இருந்தால் பதிவுசெய்ய அறிவுறுத்தியுள்ளது. மிக எளிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி குறித்து அழகு பாண்டிய ராஜா (Research Fellow, Ministry of Housing and Urban Affairs and Greater Chennai Corporation) என்பவரிடம் பேசினோம்.

“சென்னையில் கொரோனா வைரஸின் சமூகப் பரவலைத் தடுக்க இந்த ஆப் யோசனையை மாநகராட்சியிடம் தெரிவித்தோம். அவர்களும் உடனடியாக ஒப்புதல் தரவே நான்கு நாள்களில் இந்த ஆப் தயாரானது. மக்கள் பயன்படுத்த, மிக மிக எளிதான முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

சென்னை மாநகராட்சி

`GCC CORONA Monitoring’ செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள், ப்ளே ஸ்டோரில் `GCC CORONA Monitoring’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். (ஆப்பிள் மொபைலுக்கும் விரைவில் இந்த ஆப் வருகிறது)

2. பின்னர் செயலியினுள் செல்ல, அது உங்கள் மொபைல் எண் கேட்கும். அதைப் பதிவுசெய்ய வேண்டும். வேறு தகவல்கள் எதையும் தர வேண்டாம்.

3. பதிவுசெய்யப்பட்ட எண்ணுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) வரும். அதைப் பதிவுசெய்ய வேண்டும்.

App

4. இப்போது இரண்டு ஆப்ஷன் இருக்கும். ஒன்று குவாரன்டைன் மற்றொன்று சாதாரண காய்ச்சல்.. அதில் எதைத் தேர்வு செய்தாலும் புகைப்படும் எடுக்க கேமரா ஆன் ஆகிவிடும்.

5. உங்களின் புகைப்படம்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. வீட்டின் வாசல் கதவைக்கூட பதிவிடலாம். குவாரன்டைனில் இருக்கவேண்டிய நபர்கள், தங்களின் வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் தனிமைப்படுத்துதல் நோட்டீஸைக்கூட புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.

புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் அந்த நபரின் இருப்பிடம் மாநகராட்சியில் பதிவாகிவிடும். அதன் பின்னர் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். மாநகராட்சியைச் சேர்ந்த மருத்துவர்கள் உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார்கள்.

Also Read: கொரோனாவோ.. சாதாரண காய்ச்சலோ.. சென்னை மாநகராட்சியின் இந்த ஆப் உங்களுக்கு ரொம்பவே உதவும்..!

“சிட்டிசன் டிட்ராக்கிங் என்று சொல்லக்கூடிய பணிகளை சென்னை மாநகராட்சி தான் முதன் முதலாக கொண்டு வந்துள்ளது. மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து காய்ச்சல் இருந்தால் பதிவு செய்வது.. அவ்வளவு தான்… கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களின் பங்களிப்பும் எங்களுக்கு தேவை” என்றார் அழகு பாண்டிய ராஜா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.