கொரோனாவைத் தடுக்க கொரோனாவாகவே மாறி நெல்லை காவலர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் படி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியும் அனுப்பி வைக்கின்றனர். இதில் சில காவலர்கள் நூதன முறையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நெல்லை காவலர்களும் இணைந்துள்ளனர்.
தோனி, கோலி இல்லாத இந்திய அணி ? தேர்வு செய்த ஷேன் வார்னே !
இந்தியாவில் வேறூன்றும் கொரோனா: 50ஆக அதிகரித்த உயிரிழப்பு!
நெல்லையில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை, எச்சரிக்கும் வகையில் கொரோனா போன்ற முகமூடி அணிந்து காவல் துறையினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நெல்லை டவுண் பகுதியில் தலைகவசத்தில் கொரோனா உருவம் உருவாக்கி அதன் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையர் கூறுகையில் “மாநகர பகுதியில் காவலர்கள், ஊர்காவல் படையினர் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மேலப்பாளையம் பகுதியில் அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக ” தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM