உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவுக்கென்று தனியாக மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு, அதன் பரவலைத் தடுப்பதில்தான் உள்ளது. பரவலைத் தடுக்கும் முயற்சியாகதான் லாக்- டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா – மருத்துவப் பணியாளர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் தவிர்த்து, வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருப்பவர்களை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க அது மட்டும் போதாது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் மற்ற மக்களையும் அரசு நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். அதன் முயற்சியாகதான் சென்னை மாநகராட்சி `GCC CORONA Monitoring’ எனும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடுகளில் இருப்பவர்களையும் கண்காணிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

சென்னை மாநகராட்சி

இது தொடர்பாக அழகு பாண்டிய ராஜா (Research Fellow, Ministry of Housing and Urban Affairs and Greater Chennai Corporation) அவர்களிடம் பேசினாம்… “கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் கண்காணிப்பு மிக மிக அவசியம். பயன்படுத்துவதற்கு மிக மிக எளிமையான இந்தச் செயலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான செயலி என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை” என்றவர் இந்தச் செயலியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறார்.

“இந்தச் செயலியை சென்னை மாநகராட்சியில் கீழ் வருபவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறது என்றால், அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இந்தச் செயலியில் சாதாரண காய்ச்சல் என்று இருக்கும் பகுதியில் ஒரு புகைப்படம் எடுத்து அப்லோடு செய்தால் போதும்.

சென்னை மாநகராட்சியின் புதிய ஆப்

குறிப்பிட்ட அந்த நபரின் லொகேஷனும் எங்களுக்கு வந்துவிடும். உடனடியாக எங்கள் மருத்துவர்கள் அந்த நபரை தொடர்புகொண்டு பேசுவார்கள். கொரோனா இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் தொலைபேசி உரையாடலில் உணர்ந்தால், அந்தப் பகுதிக்கே குழுவை அனுப்பி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் செயலியில் இருக்கும் மற்றொரு வசதி, வீட்டில் தனிப்படுத்தப்பட்டவர்களுக்கானது. அவர்களும் அவர்களுக்கான இடத்தில் புகைப்படத்தை அப்லோடு செய்வதன் மூலம் எங்கள் மருத்துவர்கள் அவர்களைக் கண்காணிப்பார்கள்” என்றார்.

கொரோனா

தொடந்து பேசிய அவர், “உங்களுக்கு சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், உங்கள் வீட்டின் அருகே அல்லது உங்கள் பகுதியில் மற்ற யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்று தெரியாது. இந்தச் செயலி மூலம் காய்ச்சல் இருப்பவர்கள் அது தொடர்பான தகவல்களை அப்லோடு செய்வதன் மூலம் எந்தப் பகுதியில் அதிகப்படியான மக்களுக்கு காய்ச்சல் இருக்கிறது என்பதை மாநாகராட்சியால் கண்காணிக்க முடியும். இதன் மூலம் அந்தப் பகுதிகளுக்கு உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளை அனுப்பி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் கொரோனாவின் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார் விரிவாக….

Also Read: `தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க ஆப்..!’ – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி

கொரோனா வைரஸை அரசு மட்டுமே நினைத்தால் கட்டுப்படுத்த முடியாது. மக்களின் ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை. கண்ணுக்குப் புலப்படாத கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நாம் வெல்ல அரசுடன் மக்களாகிய நாம் கைகோப்பது மிக அவசியம். சென்னை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சியில் சென்னை மக்கள் கட்டாயம் கைகோக்க வேண்டும்.

`GCC CORONA Monitoring’ செயலியை பயன்படுத்துவது எப்படி என்பதனை கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே…!

Also Read: சென்னை மாநகராட்சியின் `GCC CORONA Monitoring’ ஆப்! – பயன்படுத்த எளிதான சில வழிமுறைகள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.