மது அருந்தினால் கொரோனா சரியாகுமா என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவலை விட அதைக் குறித்த வதந்திகள் உலகம் முழுவதும் அதிவேகமாக, பரவி வருகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. வெப்பமான, ஈரப்பதமான இடத்தில் கொரோனா பரவாது, குளிர் கொரோனாவை கொல்லும், வெந்நீரில் குளிப்பது கொரோனாவை கொல்லும் என்றெல்லாம் வதந்தி பரவியது. இவை எதுவும் உண்மை இல்லை என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்தது.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புதுப்புது வதந்திகள் பரவிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் மது அருந்தினால் கொரோனா பாதிப்பு உண்டாகாது என்ற வதந்தியும் பரவியது. இதனை உண்மை என நம்பி ஈரானில் எரிசாராயம் குடித்த பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் மது அருந்துவதன் மூலம் கொரோனா குணமாகாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள WHO, மது அருந்துவதன் மூலம் கொரோனா குணமாகாது. அதிகமாக மது அருந்துவது உடல்நலத்திற்கு மேலும் தீமையைத் தான் தரும் என குறிப்பிட்டுள்ளது.
ஆவடி: ஊரடங்கு காரணமாக உணவில்லாமல் தவிக்கும் நரிக்குறவர் மக்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM