கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,35,957 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,245 ஆகவும் உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

தற்போதைய உலக நிலவரம் பற்றி ஜெனீவாவில் நேற்று செய்தியாளருக்குப் பேட்டியளித்த டெட்ரோஸ், “உலகம் முழுவதும் கடந்த 5 வாரங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவு அதிவேக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை 205 நாடுகளுக்கு வைரஸ் பரவிவிட்டது. அடுத்த சில நாள்களில் உலகளாவிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000- ஆகவும் இருக்கும்.

Also Read: ‘பாதிப்பு அதிகமே… ஆனாலும், கொரோனாவை இந்தியா வெல்லும்!’ – WHO கணிப்பு

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அப்பகுதிகளின் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவை வைரஸால் மிகவும் தீவிரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த நாடுகளில் கொரோனாவைக் கண்டுபிடிக்கவும், பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் போதுமான உபகரணங்கள் இல்லை.

டெட்ரோஸ்

மேலும், இதே போன்று பல நாடுகளில் குறிப்பாக ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் லாக்டவுனின் போது மக்களை அரசு பெரிதாக ஆதரிக்க முடியாத நிலை உள்ளது. வேலையிழந்த தினக்கூலிகள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் இது போன்ற நாடுகளுக்கு ஆதரவளித்து கடன் நிவாரணம் வழங்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடுகளை ஆதரிப்பதற்கான ஒரு விரைவான செயல்முறையை நாங்கள் முன்மொழிகிறோம். இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையாமலும் மக்கள் நெருக்கடியில் சிக்காமலும் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.