உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அடுத்த ஒரு வாரத்தில் 50,000 பேர் உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
2 ஆயிரத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
உலகெங்கும் கொரோனா தாக்குதலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 187 நாடுகளை சேர்ந்த 47,192 பேர் வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9 லட்சத்து 35 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் அதிகபட்சமாக 13 ஆயிரத்து 155 பேர் இறந்துள்ளதுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 9 ஆயிரத்து 53 பேரும் அமெரிக்காவில் 5 ஆயிரத்து 102 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ், கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
2ஆம் உலகப் போருக்கு பின் ‘விம்பிள்டன்’ ரத்து – இது கொரோனாவின் வரலாறு
மேலும் தொடர்ந்த அவர் “அடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்தை தொடும். உயிரிழப்வர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயரும்” என அச்சம் தெரிவித்துள்ளார்.