பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வெற்றிகரமாக ஒரு வார காலத்தைக் கடந்துள்ளோம். தொடக்கத்தில் வீட்டுக் காவல், தனிமைச் சிறை போன்ற எண்ணங்கள் நம் மனத்தில் இருந்தது. பின்னர் அதையெல்லாம் மறந்து, காலத்திற்கேற்ப நமக்கு நாமே வகுத்துக்கொண்ட அன்றாடப் பணியில் மூழ்கிவிட்டோம். நேரமே போகவில்லை என்ற நிலை மாறி, இப்போதெல்லாம் நேரமே போதவில்லை. அந்த அளவிற்கு நமக்கான வேலைகளை உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

சரி, ஒரு வாரம் எப்படிக் கடந்தது எனச் சொல்கிறேன்.

பல வரலாற்றுப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘பத்மாவதி’, ‘ஜோதா அக்பர்’, ‘பஜிரோ மஸ்தானி’, ‘ராஜராஜ சோழன்’ மற்றும் 2011-ம் ஆண்டு வெளிவந்த கொரோனா நோய் குறித்த contagion என்ற ஆங்கிலப் படம் போன்றவை.

நான், பாடல் கேட்கும் பழக்கம் உடையவன் அல்ல. ஆனால் இப்போது, உடற்பயிற்சியின்போதும், மற்ற நேரங்களிலும் அதிகமாக பாடல்களைக் கேட்கும் நல்வாய்ப்பு கிட்டியுள்ளது. இளையராஜா பாடல்கள் மனத்தை வருடுகின்றன. எத்தனை சுகமான இசையை நமக்குத் தந்திருக்கிறார்…

Representational Image

அதேபோன்று, நான் தொலைக்காட்சியும் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால், கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்த பல வரலாற்றுக் கதைகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ராஜேந்திர சோழன், ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, வியட்நாம் போரின் கதை, பல்லவர்களின் கதை, முகமது அக்பர், மாவோ, ஸ்டாலின், அலெக்சாண்டர், நெப்போலியன், கார்ல் மார்க்ஸ் என்று மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ள வரலாற்றுப் படைப்புகளைப் பார்த்தேன். பல மணி நேரம் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய / படித்ததை நினைவுகூர வேண்டிய வரலாற்றை அரைமணி நேரத்தில் அற்புதமான காட்சிகளோடு நடுநிலையாகப் பதிவு செய்துள்ளது, அந்த தனியார் தொலைக்காட்சி. இந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்துவரும் தனியார் ஊடக நண்பர்களையும் வெகுவாகப் பாராட்டலாம். நீங்களும் குடும்பத்தோடு பார்க்கலாம். இரண்டரை மணி நேரம் பார்க்கும் திரைப்படத்தை அரைமணி நேரத்தில் கதையாகச் சொல்லிவிடுகிறார்கள். முகமது அக்பர் கதையைப் பார்த்துவிட்டு, ‘அக்பர் ஜோதா’ திரைப்படத்தைப் பார்த்தால் அதன் ஆழம் விளங்கும்.

இந்தத் தனிமை நமக்கு பல உண்மைகளை உணர்த்துகிறது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் மனநோயாளியாக மாறிவிடுவார்கள் என்ற கூற்று பொய்யானது. மதுக் கடைகளை மூடுவதால் எந்தப் பெரிய பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை என்பதை இந்த ஒரு வார காலம் உணர்த்தியுள்ளது. நம் குடும்பத்தைக் கவனித்துவரும் மனைவிமார்களின் அர்ப்பணிப்பை இந்த ஒரு வார காலம் நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

வரலாற்றுப் படங்களைப் பார்த்த பாதிப்பில், இயக்குநர் மணிரத்னம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக எடுக்க உள்ளதை அறிந்து மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கத் தோன்றியது. முதல் பாகத்தை முடித்துள்ளேன்.

வீட்டு வேலைகளுக்கும் குறைவே இல்லை.

பள்ளிக் குழந்தைகள் விடுமுறை முடியப்போகிறதே என்று கவலைப்படுவதைப் போன்று இந்தத் தனிமை வாழ்க்கை இன்னும் 2 வாரத்தில் முடிந்து விடுமே எனும் ஏக்கம் தோன்றுகிறது! சுமையைச் சுகமானதாக மாற்றுவது நம் கையில்தானே உள்ளது.

புத்தகங்களை வாசிப்போம். உறவுகளை நேசிப்போம். ஊரடங்கைக் கடப்போம்!

கே.பாலு, வழக்கறிஞர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.