நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகை கீர்த்தி சுரேஷூக்கு அறிமுகம் தேவையில்லை.   இவர் மூத்த நடிகை மேனகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் ஆவார்.   தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.
 
Image
 
மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வருகிறார்.  தெலுங்கில் ‘மகாநடி’ என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் வெளியான இரு  மொழி படத்தில் நடித்த போது அவருக்குத்  தெலுங்கு மொழிக்கான விருது கிடைத்தது.  இவரது நடிப்பில் சமீபத்தில் ‘சர்கார்’ படம் வெளியானது. இப்படத்தில் விஜய் ஜோடியாக இவர் நடித்திருந்தார். 
 
 
தற்போது கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இவருக்குத் திருமணமான  செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் ஒரு முக்கியமான அரசியல் கட்சியுடன் நெருக்கமாகத் தொடர்பில் உள்ளவர்.  எனவே, கீர்த்தி சுரேஷூக்கு அவர் அரசியல் வாழ்க்கையோடு  தொடர்புடைய  ஒரு  தொழிலதிபரைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
image
 
மேலும் கீர்த்தி சுரேஷூம்  தனது தந்தையின் யோசனைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் இன்னும் திருமண தேதி குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில்  கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து அவரது திருமணம் குறித்து ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்தத் தகவல் குறித்து நடிகையோ அல்லது அவரது பெற்றோர்களோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.