ஆடம்பர ஹோட்டல் ஒன்றினை முழுமையாக வாடகைக்கு எடுத்து தாய்லாந்து மன்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
40 ஆயிரம் உயிர்களை கொரோனா வைரஸ் பலிகொண்டுள்ள நிலையில், மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதலே மிகப்பெரிய தீர்வாக உள்ளது என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தாய்லாந்து மன்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விதம் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் பேசப்பட்டு வருகிறது.
தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக, ஜெர்மனி நாட்டில் உள்ள ஹோட்டலை தேர்வு செய்துள்ளார். ஹோட்டலின் ஒரு அறையையோ அல்லது சில அறைகளையோ அவர் வாடகைக்கு எடுக்கவில்லை. ஒட்டுமொத்த ஹோட்டலையுமே அவர் புக்கிங் செய்துள்ளார்.
அந்த ஹோட்டலுக்கு அவர் மட்டும் தனியாகச் செல்லவில்லை. வழக்கமாக அவருக்குப் பணிவிடை செய்யும் வேலையாட்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அவர்களுடன் சேர்த்து இருபது பெண்களை அவர் அழைத்துச் சென்றுள்ளார். பெரிய பட்டாளத்தையே முதலில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கட்டுப்பாடுகள் காரணமாகவும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இப்படி 20 பெண்களுடன் ஒரு ஹோட்டல் முழுவதும் புக்கிங் செய்து கொரோனாவுக்காக தாய்லாந்து மன்னர் தனிமைப்படுத்திக் கொண்ட செய்தி
வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இப்படியொரு தனிமைப்படுத்துதலா எனப் பலரும் வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
‘ரெயின்கோட், ஹெல்மெட் தான் தற்காப்பு உபகரணம்’ – கொரோனா மருத்துவர்களின் அவலநிலை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM